பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 669

புக்கொக்கும் புயலொக்கப் பொழிமதமால் களிறொக்கும்
     பொலிகோ லன்னார்
திக்கொக்குஞ் செல்வமெலாந் திரண்டொக்கு மீர்லாந்த
     தீவா ஈட்டம்.
 
"கொக்கு ஒக்கும் தேரின் எழீஇ, குணக்கு ஒக்கும் சுடர் ஒக்கக்
                              குணத்து அக் கோமார்,
இக்கு ஒக்கும் மலர் மணி சேர் இழை ஒக்கும் அங்கிலிய தீவு
                              இறைவர் ஈட்டம்.
புக்கு ஒக்கும் புயல் ஒக்கப் பொழி மத மால் களிறு ஒக்கும்
                              பொலி கோல் அன்னார்,
திக்கு ஒக்கும் செல்வம் எலாம் திரண்டு ஒக்கும் ஈர்லாந்த
                              தீவார் ஈட்டம்.

     "குதிரை பூட்டும் தேரில் எழுந்து, கிழக்கில் தோன்றும் கதிரவனுக்கு
ஒப்பாகக் குணங்கொண்ட அவ்வரசர், தேனைக் கொண்டுள்ள மலர்களும்
மணிகளும் சேர்த்தமைத்த அணிகலன் போல் விளங்கும் அங்கிலிய தீவின்
அரசர் கூட்டம். தங்கிப் பெய்யும் மழை போலப் பொழியும் மதத்தின்
மயக்கங் கொண்ட யானைக்கு ஒப்பாகப் பொலிவுடன் விளங்கும் செங்கோல்
தாங்கிய அவர்களோ, திக்கெங்குமுள்ள செல்வமெல்லாம் ஒன்று திரண்டால்
தம் செல்வத்துக்கு நிகராகும் என்னத்தக்க ஈர்லாந்த தீவின் அரசர் கூட்டம்.

 
                    86
கோலுண்டே விசயங்கொள் கோலுண்ட வப்பசும்பொற்
     கோல்கை யுண்டோர்
பாலுண்டே பூந்துகில்தம் பாலுண்ட பார்த்தவராள்
     பதிய ரீட்டங்
காலுண்டே விசைகடுத்த காலுண்ட விரதமிசைக்
     களித்த வன்னார்
நூலுண்டே நீதிவழா நூலுண்ட நொர்வெற்கர்
     தலைவ ரீட்டம்.
 
"கோல் உண்டே விசயம் கொள், கோல் உண்ட அப் பசும்
                         பொற் கோல் கை உண்டோர்.
பால் உண்டே பூந்துகில் தம் பால் உண்ட பார்த்தவர் ஆள்
                         பதியர் ஈட்டம்