கால் உண்டே
விசை கடுத்த கால் உண்ட இரத மிசைக் களித்த
அன்னார்.
நூல் உண்டே நீதி வழா நூல் உண்ட நொர்வெற்கர் தலைவர்
கூட்டம்.
|
"அம்பின்
வேகத்தையும் விழுங்கிய தன்மையாய் வெற்றி
கொண்டவரும், பிற மன்னர் தம் ஆட்சிக் கோல்களையெல்லாம் விழுங்கிய
அழகிய பசும் பொன்னாலாகிய செங்கோலைத் தம் கையில் கொண்டவருமாகிய அவர்கள்,
பாலின் ஆவியையும் விழுங்கிய மெல்லிய
ஆடைச் செல்வத்தை தம்பாற் கொண்டுள்ள பார்த்தவ நாட்டவரை ஆளும்
அரசரின் கூட்டம். காற்றின் வேகத்தையும் விழுங்கி மிஞ்சிய சக்கரங்
கொண்ட தேரின் மீது மகிழ்வுடன் தோன்றும் அவர்களோ, பிற நீதி
நூல்களையெல்லாம் விழுங்கிய தன்மையாய் நீதியில் வழுவாத நூலைக்
கொண்டுள்ள நொர்வெற்க நாட்டவரின் தலைவர் கூட்டம்.
'கோல்
உண்டே விசயம் கொள் கோல்' என்ற தொடருக்கு, பழைய
உரையாசிரியர், 'எய்த அம்பினை விசையில் வென்று ஓடும் குதிரை' என்று
பொருள் கொண்டுள்ளார்; இறுதியில் நின்ற 'கோல்', சம்மட்டி என்னும்
பொருளும் உடைமையின், அதனை வலிந்து குதிரைக்கு ஆகுபெயராய்க்
கொண்டார் போலும்.
87 |
விண்டீண்டி
யாடுகொடி விமானமிசை விரிகதிர்ப்பூண்
வேய்ந்த
வன்னார்
மண்டீண்டி யுலாங்கடல்சார் வயமெஞ்சாப் பிறூசியர்தம்
மன்ன
ரீட்டம்
பண்டீண்டி யெழுங்குரலிற் பாடினர்சூழ் வரவானோர்
பரிசொத்
தன்னர்
கண்டீண்டி யின்புகுக்குங் கவின்றீட்டும் பவோனியரைக்
காக்கு
மீட்டம். |
|
"விண் தீண்டி
ஆடு கொடி விமான மிசை, விரி கதிர்ப் பூண்
வேய்ந்த
அன்னார்,
மண் தீண்டி உலாம் கடல் சார் வயம் எஞ்சாப் பிலூசியர்தம்
மன்னர்
ஈட்டம்.
பண் தீண்டி, எழும் குரலின் பாடினர் சூழ் வர, வானோர் பரிசு
ஒத்து
அன்னார்,
கண் தீண்டி இன்பு உகுக்கும் கவின் தீட்டும் பவோனியரைக்
காக்கும்
ஈட்டம். |
|