89 |
ஐயறுமோர்
வகுப்பல்லா லலகிலநாட் டரசரைத்தா
னங்கண்
காட்டி
மையறுமோர் விளக்கென்ன வந்திவணான் மனத்திரங்கி
வையத்
தோதும்
பொய்யறுமோர் மறைநன்னூல் பொற்சுடரோன் கதிர்பட்ட
புவனத்
தெங்கு
மொய்யறுமோர் முறைதானு முற்றுலவி வழங்கு மென்றான்
முருகுச்
சொல்லான். |
|
ஐ அறும் ஓர்
வகுப்பு அல்லால், அலகு இல நாட்டு அரசரைத்
தான்
அங்கண் காட்டி,
"மை அறும் ஓர் விளக்கு என்ன வந்து இவண், நான் மனத்து
இரங்கி,
வையத்து ஓதும்
பொய் அறும் ஓர் மறை நல் நூல், பொற் சுடரோன் கதிர்
பட்ட
புவனத்து எங்கும்,
மொய் அறும் ஓர் முறை தானும் முற்று உலவி வழங்கும்"
என்றான்,
முருகுச் சொல்லான். |
தேன்
போன்ற சொல்லையுடைய திருமகன், இவ்வாறு முப்பத்தொரு
பிரிவும் அல்லாமல், அளவில்லாத பிற நாட்டு அரசரையும் தான் அங்குச்
சூசைக்குக் காட்டி, "நான் மனம் இரங்கி, இருளை அறுக்கும் ஒரு விளக்குப்
போல இங்கு வந்து, இம் மண்ணுலகில் எடுத்துக் கூறவிருக்கும் பொய்யற்ற
ஒரு நல்ல வேத நூல், பொன் மயமான சுடரைக் கொண்டுள்ள பகலவனின்
கதிர்பட்ட இவ்வுலகமெங்கும்,
போர் அற்ற ஒரு முறையால் தானும்
முழுவதும் பரந்து வழங்கி வரும்" என்றான்.
நரக
பூதம்
-
விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா
90 |
பண்கடந்
தினிய சொல்லான் பகர்ந்துகாட் டியவக் கோமார்
கண்கடந் தியலு மாமை கண்கட வாமை நோக்கி
யெண்கடந் தரிய வின்ப மீதியென் றடியைப் போற்றி
மண்கடந் தமர ரொத்தான் மதுக்கடந் தலர்ந்த கோலான். |
|