புகை நிறைந்து நடுங்கத்
தக்க இருள் எங்கும் பரவவும், அவ்வாயில் செந்நிற
நெருப்பைக்கொண்டு சினத்தோடு வரும் நரக பூதம் ஒன்று முழங்கிக்
கொண்டு மேலே வந்து தோன்றிற்று.
92 |
நோய்விளை
சினங்கொ டாவி நுகரவந் தெதிர்த்த கூற்றோ
தீய்விளை நரகப் பேயோ வவற்றினுந் தீய தொன்றோ
மீய்விளை தலையேழ் கொம்பேழ் விரிசிறைச் சற்ப மேறி
வாய்விளை யழல்விட் டார்ப்ப மண்பிளந் தெழுந்த தன்றே. |
|
நோய் விளை
சினம் கொடு ஆவி நுகர வந்து எதிர்த்த கூற்றோ?
தீய் விளை நரகப் பேயோ? அவற்றினும் தீயது ஒன்றோ?
மீய் விளை தலை ஏழ், கொம்பு ஏழ், விரி சிறைச் சற்பம் ஏறி;
வாய் விளை அழல் விட்டு ஆர்ப்ப, மண் பிளந்து தெழுந்தது அன்றே
|
அது,
துன்பம் விளைவிக்கும் சினத்தோடு உயிரை உண்ண எதிர்த்து
வந்த எமனே தானோ? நெருப்பு வளரும் நரகத்திலுள்ள பேயே தானோ?
அவை இரண்டினும் தீயதாகிய வேறொன்று தானோ? தன்மேற் கொண்ட
தலைகள் ஏழும் கொம்புகள் ஏழும் விரிந்த சிறகுகளும் உள்ள ஒரு
பாம்பின்மீது ஏறிக் கொண்டு, வாயிற் பிறக்கும் நெருப்பை வெளிவிட்டு,
முழங்கிக் கொண்டு, பூமியைப் பிளந்து கொண்டு அது மேலே வந்தது.
'தீய்,'
'மீய்' விரித்தல் விகாரம் பெற்றன.
93 |
நேரொன்று
மிலதிவ் வாறே நினைப்பினும் பனிப்ப வுள்ளங்
காரொன்று முழங்கத் தஃதே கதத்தர சாக வெய்தப்
பாரொன்றுந் திசைக ளெஞ்சப் படர்ந்ததற் கொத்த வீரர்
சீரொன்று மலகில் லாத சேவகர் மருங்கிற் சென்றார். |
|
நேர் ஒன்றும்
இலது, இவ்வாறோ, நினைப்பினும் பனிப்ப உள்ளம்,
கார் ஒன்று முழக்கத்து அஃதே கதத்து அரசாக எய்த,
பார் ஒன்றும் திசைகள் எஞ்சப் படர்ந்ததற்கு ஒத்த வீரர்
சீர் ஒன்றும் அலகு இல்லாத சேவகர் மருங்கின் சென்றார். |
|