இவ்வாறு,
தனக்கு நிகர் ஒன்றுமின்றி, நினைத்தாலும் மனம்
நடுங்குமாறு, கருமேகத்துப் பொருந்திய இடி முழக்கத்தைப் போன்று
முழங்கிக் கொண்டு, சினங்கொண்ட அரசனாக அது வந்து தோன்றவே,
உலகத்துப் பொருந்திய திசைகளெல்லாம் இடமில்லாது மெலியுமாறு
பரவியதுபோன்று, போர் வீரருக்குரிய சிறப்பமைந்த அளவில்லாத
சேவகர் அதன் பக்கத்தே சூழ்ந்து சென்றனர்.
94 |
நாயின மென்னச்
சீறி நலதெலாம் பகைத்த வன்னார்
பேயின முவப்ப வேதப் பெயரற வெகுண்டு நோக்கித்
தூயின மொருங்குங் கோறச் சூழெங்கு மரவம் பொங்கி
வேயின மழிப்பப் புக்கா வெந்தழற் கதத்தி லொத்தர். |
|
நாய் இனம்
என்னச் சீறி, நலது எலாம் பகைத்த அன்னார்,
பேய் இனம் உவப்ப, வேதப் பெயர் அற வெகுண்டு தாக்கி,
தூய் இனம் ஒருங்குங் கோற, சூழ் எங்கும் அரவம் பொங்கி,
வேய் இனம் அழிப்பப் புக்க வெந் தழல், கதத்தில், ஒத்தார்.
|
நாய்க் கூட்டம் போலச் சீறி, நல்லதெல்லாவற்றையும்
பகைத்த அவர்கள், பேய்க் கூட்டம் மகிழுமாறு, வேதத்தின் பெயரே அற்றுப்
போகவேண்டுமென்று தாக்கி, தூயவர் கூட்டத்தை ஒருங்கே
கொன்றொழிக்குமாறு, சுற்றுப்புறம் எங்கும் ஆரவாரத்தோடு
பொங்கியெழுந்து, தம் சினத்தில், மூங்கிற் கூட்டத்தை அழிக்கவென்று
புகுந்த கொடிய நெருப்பை ஒத்திருந்தனர்.
'கோறல்'
எனக் கொல்லுதலைக் குறிக்கும் தொழிற் பெயருக்குக்
'கோறு' என்பதே பகுதி போலக் கொண்டு, 'கோற' என எதிர்கால
வினையெச்சம் அமைக்கப்பட்டுள்ளது.
95 |
இடத்திடத்
தலகி னல்லோ ரிறந்துயி ரெஞ்ச மாய்ந்து
சுடச்சுடப் புதுக்க லத்திற் சுவையபால் பொங்கற் போலப்
படப்படச் சிலரெண ணின்றிப் பலரெதிர்த் துவப்பி லாவி
கெடக்கெடத் தந்து வான்மேற் கேழ்முடி சூடி நிற்பார். |
|