107 |
களிப்ப
வானமு நாய்கனோர் புன்னகை காட்டி
யளிப்ப வார்வமு மாவியு மொன்றுறத் தழுவித்
துளிப்ப வாதுவந் துணர்விரி கொடிநலோ யுன்னைத்
தெளிப்ப வாசையிற் செப்பிய தகுதிசால் பென்றான். |
|
களிப்ப வானமும்,
நாய்கன், ஓர் புன்னகை காட்டி,
அளிப்ப, ஆர்வமும் ஆவியும் ஒன்று உறத் தழுவி,
"துளிப்ப ஆதுவம் துணர் விரி கொடி நலோய், உன்னைத்
தெளிப்ப, ஆசையின் செப்பிய தகுதி சால்பு" என்றான்.
|
ஆண்டவனாகிய
திருமகன், வானுலகமும் களிகூரும்படி ஒரு
புன்னகை காட்டி, அவ்வரத்தை அளித்த தன்மையாக, தன் அன்பும்
உயிரும் அவனோடு ஒன்றாகச் சேருமாறு தழுவி, "தேனைத் துளித்த
தன்மையாய்ப் பூங்கொத்து விரியும் மலர்க்கொடியை உடைய நல்லவனே,
உன்னைத் தெளிவுறுத்தும்படி, நீ ஆசையோடு சொல்லிய அத்தகுதியே
போதுமானது" என்றான். உதிரம் சிந்தக் கொண்ட ஆசையே, சிந்தியதற்குச்
சமமாகுமென்பது கருத்து.
108 |
தீய்வ ரும்படை
சிந்துசெந் நீரர செனக்காய்
நோய்வ ருந்துயர் நுகர்போறை யரசுனக் கென்றான்
மீய்வ ருந்திரு வுளம்வளன் மேவியுள் வலிப்பத்
தூய்வ ரும்படுந் துயரற விவன்பிணி சொல்வாம். |
|
"தீய் வரும்
படை சிந்து செந்நீர் அரசு எனக்கு ஆய்,
நோய் வரும் துயர் நுகர் பொறை அரசு உனக்கு என்றான்.
மீய் வரும் திருவுளம், வளன், மேவி உள் வலிப்ப,
தூய்வரும் படும் துயர் அற, இவன் பிணி சொல்வாம்: |
"கொடுமை
கொண்ட கருவிகளால் சிந்தும் இரத்தத்தைக் கொண்டு
பெறும் அரசு எனக்கு உரியதாக, நோயினால் வரும் துயரத்தை
|