பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 684

முப்பத்துமூன்றாவது
 

 
பிணி தோற்று படலம்
 

     சூசை நோய்வாய்ப்பட்டது பற்றிக் கூறும் பகுதி.

                      நோயின் கொடுமை

          - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

 
                              1
வேன்முகத் தசடர் கையால் வீழ்ந்திறப் பரிதென் கேனோ
நான்முகத் துறுநோய்க் கெஞ்சா நயத்தமை வரிதென்
                                    கேனோ
கோன்முகத் தீண்டே சாதல் குணமெனப் பலநாள்
                                    வெந்நோய்ப்
பான்முகத் தவல மாற்றாப் பலர்தமைக் கொல்வா ரன்றோ.
 
வேல் முகத்து, அசடர் கையால், வீழ்ந்து இறப்பு அரிது
                                   என்கேனோ?
நால் முகத்து உறு நோய்க்கு, எஞ்சா நயத்து அமைவு அரிது
                                   என்கேனோ?
கோல் முகத்து ஈண்டே சாதல் குணம் என, பல நாள் வெந்
நோய்ப் பால் முகத்து, அவலம் ஆற்றாப் பலர், தமைக்

                                   கொல்வார் அன்றோ?

     தீயோர் கையால் வேல் கொண்டு வெட்டுண்டு வீழ்ந்து இறப்பது
அரிது என்பேனோ? நாலு பக்கத்திருத்தும் தன்னை வந்து தாக்கும்
நோய்க்கு, குறையாத இன்பத்தோடு அமைந்து தாங்குதல் அரிது
என்பேனோ? பல நாட்கள் கொடிய நோய் கொண்டவிடத்து, அதன்
துன்பம் தாங்க இயலாத பலர், அம்பின் முகத்தே இங்கு அடிபட்டுச் சாதல்
அதனினும் நலமென்று கொண்டு, தம்மையே கொன்று கொள்வர்.

     அன்றோ - அசைநிலை

 
                    2
தீங்கியன் றாய துன்பந் திரிந்தற விளைவு காண
வீங்கியன் றுதித்த நாத னெளியனாய்த் தனக்கு மற்றை
யாங்கியன் றமைகைத் தாதை யனைத்திலு மரிய துன்பப்
பாங்கியன் றரசு கொள்ளப் பலபிணி படச்செய் தானே.