பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 686

                         4
வெவ்வினை யனைத்தும் பரவ விளைவுதான் மீண்டத் துன்பஞ்
செவ்வினை வளர்வு காட்டத் திருவுள மெனநல் லோர்கண்
டவ்வினை நுகர்ந்து மாழ்கா வருந்தவன் றானும் பன்னோய்
மொய்வ்வினை கொண்டுள் ளெஞ்சா முற்றிவண் டிலத மானான்.
 
வெவ்வினை அனைத்தும் பாவ விளைவு தான், மீண்டு, அத்துன்ம்
செவ்வினை வளர்வு காட்டத் திருவுளம் என நல்லோர் கண்டு,
அவ்வினை நுகர்ந்து மாழ்கா, அருந் தவன் தானும் பல்நோய்
மொய்வினை கொண்டு, உள் எஞ்சா, முற்று இவண் திலதம் ஆனான்.

     கொடு வினையாகிய துன்பம் யாவும் பாவத்தினால் விளைவன ஆகும்.
எனினும், அத்துன்பத்தின் மூலம் நல்வினையின் வளர்ச்சியைக் காட்டுதல்
தெய்வத் திருவுளமென்று நல்லோர் கண்டு, அக் கொடு வினையைப்
பொறுமையோடு அனுபவித்து மயங்காதிருக்குமாறு, அரிய தவத்தோனாகிய
சூசை தானும் பல நோய்கள் தன்பால் மொய்த்த செயலை ஏற்றுக் கொண்டு,
உள்ளம் தளராதிருந்து, இவ்வுலகம் முழுவதற்கும் ஒரு திலகம் போல்
ஆனான்.

 
                             5
இறைக்கொரு தாதை யாக வெழுந்தெலா வறங்கள் பூத்து
மறைக்கொரு கொழுகொம் பன்னான் வருந்திநோ யுற்ற
பாலாற்
பொறைக்கொரு நிலைச்சார் பல்லாற் புலம்பிநா மெய்தும்
பீடை
முறைக்கொரு மருந்து மாகி முற்றுநா முவப்ப நொந்தான்.
 
இறைக்கு ஒரு தாதையாக எழுந்து, எலா அறங்கள் பூத்து,
மறைக்கு ஒரு கொழு கொம்பு அன்னான் வருந்தி நோய் உற்ற பாலால்,
பொறைக்கு ஒரு நிலைச் சார்பு அல்லால், புலம்பி நாம் எய்தும்
பீடை முறைக்கு ஒரு மருந்தும் ஆகி, முற்றும் நாம் உவப்ப நொந்தான்.