ஆண்டவனுக்கு
ஒரு வளர்ப்புத் தந்தையாக அமைந்து, எல்லாப்
புண்ணியங்களும் தன்பால் மலர்ந்து, வேதத்திற்கு ஒரு பற்றுக்கோடு
போன்றவனாகிய சூசை, தானுமே நோய் கொண்டு வருந்திய தன்மையால்,
பொறுமைக்கு ஒரு நிலைக்களமாகத் தான் அமைந்ததும் அல்லாமல்,
புலம்பி நாம் அடையும் துன்ப நிலைக்கு ஒரு மருந்து போலவும் ஆகி,
நாம் முற்றிலும் மகிழுமாறு தானே இவ்வாறு வருந்தினான்.
6 |
விரைகிடந்
தலர்ந்த பைம்பூ வெந்தழற் பட்ட தேபோ
னரைகிடந் திரிந்த மூப்பி னைந்துடல் தளர்ந்து வாட
வரைகிடந் ததிர்ந்து மல்கும் வாரியின் மலிந்த நோய்கள்
சிரைகிடந் திழுத்தென் பெல்லாஞ் சினங்கொடு குடைவ தாமால். |
|
விரை கிடந்து
அலர்ந்த பைம் பூ வெந் தழல் பட்டதே போல்,
நரை கிடந்து இரிந்த மூப்பின் நைந்து உடல் தளர்ந்து வாட,
வரை கிடந்து அதிர்ந்து மல்கும் வாரியின், மலிந்த நோய்கள்
சிரை கிடந்து இழுத்து, என்பு எலாம் சினம் கொடு குடைவ தாம் ஆல். |
மணம்
கொண்டு மலர்ந்த பசுமையான மலர் கொடிய நெருப்பில்
அகப்பட்டதே போல், நரையோடு கூடி மெலிந்த முதுமையால் சோர்ந்து
உடல் தளர்ந்து இயல்பாக வாடவும், மலையினின்று முழங்கிப் பாய்ந்து
பெருகும் வெள்ளம் போல், மிகுந்த நோய்கள் நரம்புக்குள் கிடந்து இழுத்து,
தாமே மேலும் சினம் கொண்டு எலும்புகளையெல்லாம் குடையும்.
7 |
போர்முகத்
தஞ்சா வீரப் புழைக்கையோ புணரி மோத
நீர்முகத் தசையாக் குன்றோ நெடும்பிணி முகத்தெஞ் சாதான்
கார்முகத் தலர்ந்த முல்லைக் காவெனத் திரண்ட பன்னோய்
சேர்முகத் தலர்ந்து தேவ திருவுளந் துதித்தல் விள்ளான். |
|
போர் முகத்து
அஞ்சா வீரப் புழைக் கையோ, புணரி மோத
நீர் முகத்து அஞ்சாக் குன்றோ, நெடும் பிணி முகத்து எஞ்சாதான்?
கார் முகத்து அலர்ந்த முல்லைக் கா என, திரண்ட பல் நோய்
சேர் முகத்து, அலர்ந்து, தேவ திருவுளம் துதித்தல் விள்ளான் : |
|