பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 688

     நீடித்த நோயின் முன் தளராதவனாகிய சூசை, போரினிடத்து அஞ்சாத
வீரமுள்ள யானை என்போமோ? கடல் நீர் மோதியவிடத்தும் அஞ்சாது
நிலைபெறும் மலை என்போமோ? திரண்ட பல நோய்கள் தன்னைச்
சேர்ந்தவிடத்தும், கார் காலத்தில் மலர்ந்த முல்லைக் காடு போலத் தானும்
மனம் மகிழ்ந்து, தெய்வத் திருவுளத்தைத் துதித்தல் விடாதவன் ஆயினான் :

     புழைக் கை : துளையுள்ள கை : துதிக்கை கொண்ட யானைக்கு,
அன்மொழித் தொகைப் புறத்துப் பிறந்த ஆகு பெயர்.

 
                          8
தீய்வருந் துகள்கள் வெஃகித் தீயவோ வருந்த லாற்றோ
மாய்வரும் புரைதீ தல்லால் வழுவுமொன் றுண்டோ
வென்பான்
மீய்வருந் துன்ம மின்பம் வீற்றுவீற் றாகக் கொள்ளா
ராய்வருந் திரியாத் தேவ வன்புணர் நீாா ரென்பான்.
 

"தீய் வரும் துகள்கள் வெஃகி, தீயவோ அருந்தல் ஆற்றோம்?
மாய்வு அரும் புரை தீது அல்லால், வழுவும் ஒன்று உண்டோ?"
                                             என்பான்.
"மீய் வரும் துன்பம் இன்பம், வீற்று வீற்று ஆகக் கொள்ளார்
ஆய்வு அரும் திரியாத் தேவ அன்பு உணர் நீரார்" என்பான்.


     "தீமையை அடிப்படையாகக் கொண்டு வரும் பாவங்களை விரும்பிச்
செய்த பின், அவற்றின் தீய பயனை அனுபவிக்கப் பொறாதிருப்போமோ?
அழித்தற்குரிய பாவமே தீமையல்லாமல், வேறு கேடு எதுவும் உண்டோ?"
என்பான். "ஆராய்வதற்கு அரியதும் மாறுபடாததுமான கடவுளன்பை
உணரும் தன்மையுடையார், தம்மீது வந்து சேரும் துன்பத்தையும்
இன்பத்தையும் வேறு வேறாகக் கருத மாட்டார்" என்பான்.

 
                           9
பொய்க்குமோ ரின்ப மாந்திப் புரையெனு நஞ்சுட் கொண்டாற்
கைக்குமோர் மருந்துண் ணாதோ கடுத்தநோ யொழியு
மென்பான்
றைக்குமோ ரம்பிற் பீடை தகைகெட மிகுங்கால் வான்மேன்
மொய்க்குமோ ரின்ப முள்ளி முற்றெலா மவியு மென்பான்.