பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 689

"பொய்க்கும் ஓர் இன்பம் மாந்தி, புரை எனும் நஞ்சு உட்கொண்டால்,
கைக்கும் ஓர் மருந்து உண்ணாதோ, கடுத்த நோய், ஒழியும்? என்பான்.
"தைக்கும் ஓர் அம்பின், பீடை தகை கெட மிகுங்கால், வான் மேல்
மொய்க்கும் ஓர் இன்பம் உள்ளி, முற்று எலாம் அவியும்" என்பான்.


     "பொய்யான ஓர் இன்பத்தை நுகர்ந்து, அதன்மூலம் பாவம் என்னும்
நஞ்சை உட் கொண்டால், அந்தக் கடுமையான நோய், துன்பமென்னும்
கசப்பான ஒரு மருந்தை உண்ணாமல் ஒழியுமோ? என்பான். "தைக்கும் ஓர்
அம்பு போல், துன்பம் அளவின்றி மிகும் காலத்து, அதற்கு ஈடாக
வானுலகில் திரளாகக் கிடைக்கும் ஓர் இன்பத்தை நினைவிற் கொள்ளவே,
அத்துன்பமெல்லாம் முற்றிலும் கெடும்" என்பான்.

 
                           10
முக்குடை நிழலில் யாவு முற்றுமா ளிறைவன் பாரிற்
புக்குடைப் புரைக டீர்த்துப் பொன்றவே யுதித்த பின்ன
ரிக்குடை யின்ப மல்லா லெமக்கிடர் தகாதென் பாரோ
மிக்குடைச் செல்வ வல்லோன் விரும்பிய நன்றி தென்பான்.
 
"முக் குடை நிழலில் யாவும் முற்றும் ஆள் இறைவன் பாரில்
புக்கு உடைப் புரைகள் தீர்த்து, பொன்றவே உதித்த பின்னர்,
'இக்கு உடை இன்பம் அல்லால், எமக்கு இடர் தகாது, என்பாரோ?
மிக்கு உடைச் செல்வ வல்லோன் விரும்பிய நன்று இது" என்பான்.

     "தனது மூன்று குடைகளின் நிழலில் உயிர்கள் யாவற்றையும் பொதுவற
ஆளும் ஆண்டவனே இவ்வுலகில் புகுந்துள்ள பாவங்களைத் தீர்த்து,
கழுவாயாக இறப்பதற்கென வந்து தோன்றிய பின்னர், 'தேன் போல் இனிய
இன்பமே அல்லாமல், துன்பம் எமக்குப் பொருந்தாது, என்று யாரேனும்
சொல்லுவரோ? மிக்க செல்வமுள்ள எல்லாம் வல்ல ஆண்டவன் விரும்பித்
தேடிய நன்மை இத்துன்பமே" என்பான்.