பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 691

     சித்திரமாகத் தீட்டியது போன்ற அழகிய உருவம் கொண்டு வானவர்
திரிந்து வந்து தோன்றிய மகிழ்ச்சியாலும், தாம் ஏந்திய வீணையும் தம்
வாயும் சேர்ந்து சொரிந்த ஓசையோடு தொடர்ந்து இசை பாடுதலாலும், அங்கு
விரிந்த அழகுள்ள விழாக் கோலமே தோன்றியது.

 
                    13
ஆடு வார்திரு நாமங்க ளாடுவார்
பாடு வார்பிணி யோன்றுதி பாடுவார்
தோடு வார்வெறித் தொங்கலிட் டோடுவார்
வீடு வார்நயஞ் செய்குவர் வீடிலார்.
 
ஆடுவார்; திரு நாமங்கள் ஆடுவார்;
பாடுவார்; பிணியோன் துதி பாடுவார்;
தோடுவார் வெறித் தொங்கல் இட்டு ஓடுவார்;
வீடுவார் நயம் செய்குவர், வீடு இலார்.

     அவ்வானவர் ஆடுவர்; ஆண்டவன் திருப் பெயர்களைக் கூறி
ஆடுவர்; பாடுவர்; நோய்வாய்ப்பட்டவனின் புகழைப் போற்றிப் பாடுவர்;
இதழ்களினின்று பொழியும் மணம் கொண்ட மாலைகளை அணிந்து
கொண்டு ஓடுவர்; இடைவிடுதல் இல்லாதவராய், வான் வீட்டின் நீடிய
இன்பங்களை வழங்குவர்.

 
               1433
ஆய வின்பம் றாமைய ருந்தவு
நேய வண்டவ னேரிசை பாடவுங்
காய வெந்துயர் காண்டல னத்துய
ரோய வும்பரு ளும்பனென் றாயினான்.
 

ஆய இன்பம் அறாமை அருந்தவும்,
நேய வண்தவன், நேர் இசை பாடவும்,
காய வெந்துயர் காண்டலன்; அத்துயர்
ஓய, உம்பருள் உம்பன் என்று ஆயினான்.


     இதனால் உண்டான இன்பத்தை விடாமல் நுகரவே, நேயம் கொண்ட
வளமான தவத்தோனாகிய சூசை, அதற்கு நிகராகத் தானும் இசை பாடவே,
தன் உடலிற் கொண்ட கொடிய துயரத்தைக் காணாதவனானான்; அத்துயரம்
ஓயவே, வானவருள் தானும் ஒரு வானவன் போல் ஆயினான்.