15 |
துனிவ ருந்துய
ராக்கைது கைத்துளி
நனிவ ருங்களி நல்லுயி ருண்டலான்
முனிவ ருந்தழல் முய்த்தெரி பாலையிற்
பனிவ ருந்துணர் பூத்தன பான்மையே. |
|
துனி வரும் துயர்
ஆக்கை துகைத்துளி,
நனி வரும் களி நல் உயிர் உண்டலால்,
முனி வரும் தழல் முய்த்து எரி பாலையில்
பனி வரும் துணர் பூத்து அன பான்மையே.
|
துன்பம்
தரும் நோயின் துயரம் தன் உடலைத் தாக்கிய போதே, தன்
நல்ல உயிர் மிகுதியான மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்தமையால்,
சினங் கொண்ட நெருப்பு மூண்டு எரியும் பாலைவனத்தில் குளிர்ச்சி
கொண்ட பூங்கொத்துகள் பூத்தது போன்ற தன்மையாயிற்று.
மரியாள்
வேண்டுதல்
16 |
துகைத்த
நோய்தணி வுந்தொகை யும்படா
பகைத்த பான்மைப ணிப்பத மங்கைகண்
டுகைத்த வேவலி லோரிரு போதது
தகைத்த பின்புசி னங்கொடு தாக்குமால். |
|
துகைத்த நோய்,
தணிவும் தொகையும் படா
பகைத்த பான்மை, பணிப் பத மங்கை கண்டு
உகைத்த ஏவலில், ஓர் இரு போது அது
தகைத்த பின்பு சினம் கொடு தாக்கும் ஆல். |
சூசையை வாட்டிய நோய், தணிதலும் அளவுக்கு அடங்கலும்
இல்லாமல் பகைத்த தன்மையை, பாம்பை மிதித்த அடி கொண்ட
மங்கையாகிய மரியாள் கண்டு செலுத்திய கட்டளையால், ஒன்றிரண்டு
தடவை அது தடுக்கப்பட்ட பின்பு, மீண்டும் சினத்தோடு தாக்கும்.
|