'கண்டு'
என்பது, 'காண்டு' என நீட்டல் விகாரம் கொண்டது.
19 |
துவர்க்கும்
வெம்பகை யோர்க்கருள் சூட்டிமற்
றெவர்க்கு நோயொழித் தின்னுயி ரீகவந்
தவர்க்குஞ் செய்தயை யீங்களி யாய்கொலோ
வுவர்க்கும் வேலையொவ் வாவரு ளோயென்றாள். |
|
"துவர்க்கும்
வெம்பகையோர்க்கு அருள் சூட்டி, மற்று
எவர்க்கும் நோய் ஒழித்து, இன் உயிர் ஈக வந்து,
அவர்க்கும் செய்தயை ஈங்கு அளியாய் கொலோ,
உவர்க்கும் வேலை ஒவ்வா அருளோய்?" என்றாள். |
"உப்புக்
கொண்ட கடலும் அளவால் ஒவ்வாத அருள் உள்ளவனே,
வெறுப்பூட்டும் கொடிய பகைவருக்கும் அருளைப் பொழிந்து, மற்று
யாவருக்கும் நோய்களைத் தீர்த்து, தன் இனிய உயிரையும் கொடுக்கவென்று
அவதரித்து வந்து, மற்றவர்க்கெல்லாம் காட்டும் தயவை இங்கு உன்
கைத்தாதைக்குத் தரமாட்டாயோ?" என்றாள்.
20 |
அல்ல தன்புடை
யாவலர்க் காகுல
நல்ல தென்றிவற் கித்துயர் நல்கினேல்
வல்ல நந்தன வந்தவிந் நோய்கணான்
புல்ல வன்புட னீகெனப் போற்றினாள். |
|
"அல்லது, அன்பு
உடை ஆவலர்க்கு ஆகுலம்
நல்லது என்று, இவற்கு இத்துயர் நல்கினேல்,
வல்ல நந்தன, வந்த இந் நோய்கள் நான்
புல்ல அன்புடன் ஈக" எனப் போற்றினாள்.
|
"அல்லது,
ஆவலோடு கூடிய அன்புள்ளவர்க்குத் துன்பமே நலம்
தருவதாகுமென்று கருதி, இவனுக்கு நீ இத்துயரத்தைத் தந்திருந்தால்,
வல்லமையுள்ள மகனே, இவனுக்கு வந்த இந் நோய்களை நான் அடையுமாறு
அன்புடன் தருவாயாக" என்று போற்றினாள்.
|