இருவர்
பணிவிடை
-
மா, கூவிளம், - மா, - விளம், - விளம், - மா
23 |
இனைய கேட்டலுந்
தாயே யிதுதிரு வுளமென விணங்கித்
தனைய னேத்தின டணியாத் தலைவனோய்க் கினைந்தழு
தாற்றா சுனைய தாமரை யிருகண் சுட்டெரி யழற்றிர ளுண்ட
தனைய வாடின ளந்நோ யாற்றவும் வருந்தினள் மாதோ. |
|
இனைய கேட்டலும்
தாயே, இது திருவுளம் என இணங்கி,
தனையன் ஏத்தினள், தணியாத் தலைவன் நோய்க்கு இனைந்து அழுது,
அற்றா, சுனைய தாமரை இரு கண் சுட்டு எரி அழல் திரள் உண்டது
அனைய வாடினள்; அந் நோய் ஆற்றவும் வருந்தினள் மாதோ.
|
தாயாகிய
மரியாள் இவற்றைக் கேட்டதும், இது தெய்வத் திருவுளம்
என்று உடன்பட்டு, தன் மகனைப் போற்றினாள்; தன் தலைவனின் தணியாத
நோய் பற்றி வருந்தி அழுது, அதனைத் தாங்க மாட்டாமல், தடாகத்திலுள்ள
தாமரை மலர்கள் போன்ற தன் இரு கண்களையும் சுட்டெரிக்கும் நெருப்பே
உண்டது போல வாடினாள்; அந்நோயைத் தணிக்கவும் முயன்றாள்.
24 |
இனிய தேனினு
மினிய யாவிலு மினியதீஞ் சொல்லைக்
கனிய வாடுவ ளுயிரைக் காத்தமெய் யெனவிரு பொழுதே
நனிய வாவொடு பிரியா நயந்துசெய் யேவலா லுடலை
முனிய வந்தநோய் முத்தி முற்றுகும் வாழ்வினு மினிதே. |
|
இனிய தேனினும்,
இனிய யாவிலும் இனிய தீம் சொல்லைக்
கனிய ஆடுவள். உயிரைக் காத்த மெய் என, இரு பொழுதே,
நனி அவாவொடு, பிரியா, நயந்து செய் ஏவலால், உடலை
முனிய வந்த நோய், முத்தி முற்று உகும் வாழ்வினும் இனிதே. |
|