இனிய
தேனைக் காட்டிலும், மற்றும் இனிய யாவற்றைக் காட்டிலும்
மிக இனிய சொல்லைக் கனிவோடு கூறுவாள். உயிரைப் பேணிய உடல்
போல், பகல் இரவு இருவேளையும், மிக்க ஆவலோடும், பிரியாமலும்,
விரும்பிச் செய்யும் பணிவிடையால், சூசை உடலைச் சினந்து தாக்க வந்த
நோய், இன்பம் முழுமையாகச் சொரியும் மோட்ச வாழ்வைக் காட்டிலும்
இனிதாயிற்று.
'இனிய
தீம்' என, இனிமைச் சொல் அடுக்கி வந்து, 'மிக இனிய'
என்று பொருள்பட்டது.
25 |
தேன்க லந்ததோ
சுவையிற் சீரிய தெளிந்தபா கதுவோ
வான்க லந்தநல் லமுதோ வான்மலர் மதுவதோ யாதோ
மீன்க லந்தநீண் முடியாள் விளைந்ததன் னன்புகூட் டியதோர்
கான்க லந்ததீம் விருந்தைக் கனிவிலெந் நாளுமோம் புவளால். |
|
தேன் கலந்ததோ?
சுவையில் சீரிய தெளிந்த பாகு அதுவோ?
வான் கலந்த நல் அமுதோ? வான் மலர் மது அதோ? யாதோ?
மீன் கலந்த நீள் முடியாள், விளைந்த தன் அன்பு கூட்டியது ஓர்
கான் கலந்த தீம் விருந்தைக் கனிவில் எந் நாளும் ஓம்புவள் ஆல். |
விண்மீன்கள்
கொண்டு அமைந்த நெடிய முடியை அணிந்த மரியாள்,
முதிர்ந்த தன் அன்பையும் கூட்டி அமைத்ததொரு நறுமணம் கலந்த இனிய
விருந்தைக் கனிவோடு எந்நாளும் தந்து சூசையைப் பேணுவாள்.
அவ்விருந்து தேன் கலந்தது என்பதோ? சுவையில் சிறந்த தெளிந்த
வெல்லப் பாகு தானோ? வானுலகிலுள்ள நல்ல அமுதமோ? வானுலக
மலர்களில் அமைந்த தேன் தானோ? வேறு எதுவோ?
மரியன்னை
உணவு ஆக்கல் 14 : 130 - 131 காண்க.
26 |
ஆவல் செய்யரு
டாயு மனைத்தையுந் தொக்குள வாக்கிக்
காவல் செய்திரு மகனும் கண்ணினைக் காத்தகண் ணிமைபோ
லோவல் செய்பிணி மாறா வுளைந்தமா தவனைக்காத் திருவ
ரேவல் செய்தனர் வானு மியம்பரும் வியப்புற மாதோ. |
|