பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 699

     சூசையின் உழைப்பால் திருமகன் உயிர் வாழ்ந்தது, 9 : 110 காண்க.

 
                    28
நடலை யோடருந் தேவ நயங்களு மின்னண மாறா
படலை மாலையாய்ப் புணரப் பகைப்பிணி சுடச்சுடத் துகைத்த
வுடலை வாட்டிய தன்மைத் துயிரெழச் சூசையே பொறைக்கோர்
விடலை யாயின தகுதி விளம்பவோ புலமையின் வல்லோர்.
 
நடலை யோடு அருந் தேவ நயங்களும், இன்னணம், மாறா
படலை மாலையாய்ப் புணர, பகைப் பிணி சுடச் சுட துகைத்த
உடலை வாட்டிய தன்மைத்து உயிர் எழ சூசையே பொறைக்கு ஓர்
விடலை ஆயின தகுதி விளம்பவோ புலமையின் வல்லோர்?

     இவ்வாறு, துன்பத்தோடு அரிய தெய்வச் செயலாகிய இன்பங்களும்
மாறாமல் அடுக்கு மாலை போல் தன்பால் பொருந்தவும், அப்பகைத்
தன்மையுள்ள நோய் தன்னைச் சுடச் சுடத் தாக்கிய உடலை வாட்டிய
நிலையிலும் தன் உயிர் எழுச்சி கொண்டமைந்த சூசை, பொறுமைக்கு ஒரு
தலைவனாய் விளங்கிய சிறப்பைப் புலமையில் வல்லோரும் சொல்ல
இயலுமோ?

               பிணி தோற்று படலம் முற்றும்

            ஆகப் படலம் 33க்குப் பாடல்கள் 3336