சூசை
இறந்து, கடவுளின் தூதுவனாகச் சென்று, மீட்பை எதிர்
நோக்கிப் பாதலத்தில்
இருந்த புண்ணியவாளருக்குத் திருமகன் பிறப்பு
முதலிய செய்திகளை அறிவித்த விவரம் கூறும் பகுதி.
வானவர்
பேணல்
-
விளம், - விளம், - மா, தேமா
1 |
நீடிய பிணிகளெண்
வருட நீங்கிலா
வாடிய வுடற்குயிர் வாடி லாவளர்ந்
தோடிய மீன்மிதித் துயர்ந்து வானலஞ்
சூடிய தன்மையிற் சூசை யாயினான். |
|
நீடிய பிணிகள்
எண் வருடம் நீங்கு இலா,
வாடிய உடற்கு உயிர் வாடு இலா வளர்ந்து,
ஓடிய மீன் மிதித்து உயர்ந்து, வான் நலம்
சூடிய தன்மையின் சூசை ஆயினான். |
நீடித்த
நோய்கள் எட்டாண்டுகளாக நீங்குதலின்றி, தன் வாடிய
உடலின் அளவிற்கு உயிர் வாடுதலின்றி வளர்ந்து, வானில் உலாவிய
விண்மீன்களை மிதித்துத் தாண்டி மேலே உயர்ந்துபோய், வானுலக
நலங்களை அணிந்த தன்மையாய்ச் சூசை விளங்கினான்.
2 |
கட்புலங்
கடந்துருக் கடிந்த வானவ
ருட்புலந் தகுந்தகத் தொத்த மாட்சியான்
மட்புலந் தணந்தினி யுரிய வாழ்வுற
விட்புலந் தணந்தனர் விளிப்ப வெய்தினார். |
|
கண் புலம் கடந்து
உருக் கடிந்த வானவர்,
உள் புலம் தகுந்து, அகத்து ஒத்த மாட்சியான்,
மண் புலம் தணந்து இனி உரிய வாழ்வு உற,
விண் புலம் தணந்தனர் விளிப்ப எய்தினார். |
|