கண்ணுக்குப்
புலப்படுதலைக் கடந்து உருவமற்று விளங்கிய வானவர்,
தன் உள்ளத்தில் தகுதி வாய்ந்து, மனத்தால் தம்மையொத்த மாட்சி
கொண்டவனாகிய சூசை, இனி இம்மண்ணுலகத்தை நீங்கித் தனக்குரிய
விண்ணக வாழ்வை அடையுமாறு, தாம் விண்ணுலகை நீங்கி அவனை
அழைக்க வந்தடைந்தனர்.
3 |
பணிவளர்
மாமையிற் பளிக்கு மேனிகொண்
டணிவளர் மகரயா ழாதி மற்றையு
மணிவளர் மலர்க்கையாற் றடவி வாய்க்குரல்
பிணிவளர் துயரறப் பேணிப் பாடுவார். |
|
பணி வளர் மாமையின்
பளிக்கு மேனி கொண்டு,
அணி வளர் மகர யாழ் ஆதி மற்றையும்
மணி வளர் மலர்க் கையால் தடவி, வாய்க் குரல்
பிணி வளர் துயர் அறப் பேணிப் பாடுவார். |
அணிகலன்களால்
மேம்படும் அழகோடு பளிங்கு போன்ற உடலும்
கொண்டு, பேணி அழகு மிகுந்த மகர யாழ் முதல் மற்றைய இசைக்
கருவிகளையும் மணிகளின் ஒளி வளரும் மலர் போன்ற கையால் தடவி
வாசித்து, தம் வாய்க் குரலாலும், சூசைக்கு நோயால் வளரும் துயரம்
நீங்குமாறு பாடுவர்.
பளிங்கு
+ மேனி = பளிக்கு மேனி.
4 |
மீமழை பொழிந்தென
விண்ணிற் பூத்ததோர்
பூமழை மணமழை பொழிநன் னீர்செயுந்
தேமழை துதிமழை செறிந்த பாடல்செய்
நாமழை பகலிரா நயந்து நல்குவார். |
|
மீ மழை பொழிந்து
என, விண்னில் பூத்தது ஓர்
பூ மழை மண மழை பொழி நல் நீர் செயும்
தே மழை துதி மழை செறிந்த பாடல் செய்
நா மழை பகல் இரா நயந்து நல்குவார். |
|