பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 702

     மேலேயிருந்து மழை பொழிந்தாற் போல, வானுலகில் பூத்த ஒப்பற்ற
மலர் மழையும், மணமுள்ள மழை பொழிந்தாற் போன்ற பன்னீரால் தரும்
இனிய மழையும், வாழ்த்து மழை போல் செறிந்த பாடலால் தரும் நாவின்
மழையும், பகலும் இரவும் விருப்பத்தோடு வழங்குவர்.

     நன்னீர் - நல்ல நீர் : பன்னீர், தேன் + மழை = தேமழை.

                   கடவுள் ஏவிய தூது

 
                 5
சுகமுகத் தின்னவாய்த் தொடரொன் பான்பகல்
நிகமுகத் தாய்வள னிகரி லாவயத்
தகமுகத் தொருமுறை வின்றி யன்றொளி
முகமுகத் திறைமையை முழுதுங் கண்டுளான்.
 
சுக முகத்து இன்ன ஆய்த் தொடர் ஒன்பான் பகல்
நிக முகத்து ஆய், வளன், நிகர் இலா வயத்து
அக முகத்து ஒரு மறைவு இன்றி, அன்று,
ஒளி முக முகத்து, இறைமையை முழுதும், கண்டு உளான்.

     இன்ப முகத்தோடு இவ்வாறாய்த் தொடர்ந்து ஒன்பது நாள் நிகழும்
தன்மை அமைந்த பின்னர், சூசை, அந்நாளில், நிகரில்லாத வல்லமையோடு
தன் அகக் கண்களுக்கு ஒரு மறைவும் இல்லாமல், இறைத் தன்மையின்
அழகு முழுவதையும், ஒளி வடிவமாய்த் தன் முகக் கண்களாலும் காணப் பெற்றான்.

     'நிகழ்முகத்து' என்பது, எதுகை இன்னோசைப் பொருட்டு,
'நிக முகத்து' என நின்றது.

 
                6
உரைகடந் துணர்வரு மிறைமை யொண்முக
வரைகடந் தொழுகொளி மகிழ்ச்சி நீத்தமுட்
டரைகடந் தெனவருந் தவன்கு ளித்தெலாக்
கரைகடந் துறுநயங் கருதுத் தன்மையோ.
 
உரை கடந்து உணர்வு அரும் இறைமை ஒள்முக
வரை கடந்து ஒழுகு ஒளி மகிழ்ச்சி நீத்தம் உள்,
தரை கடந்து என அருந் தவன் குளித்து, எலாக்
கரை கடந்து உறு நயம் கருதும் தன்மையோ?