சொல்லால்
விளக்கும் தன்மை கடந்து, மனத்தால் உணர்வதற்கும்
அரிய அவ்விறைத் தன்மையின் ஒளி பொருந்திய முகத்தில்
எல்லையின்றிப் பொழியும் ஒளியால் தோன்றிய மகிழ்ச்சி வெள்ளத்தினுள்,
அரிய தவத்தோனாகிய சூசை, இம்மண்ணுலகைக் கடந்தவன் போல்
மூழ்கி, எல்லையெல்லாம் கடந்து பெற்ற இன்பம் நாம் கருதி உணரும்
தன்மையதோ?
7 |
தோடுசெய்
கொநடிலோன் றுளங்க நாயகன்
வீடுசெய் நயத்தொடு விரும்பி நோக்கினன்
சேடுசெய் கமலவாய் துளித்த தேனுரைப்
பாடுசெய் தின்னவை பரிவிற் கூறினான். |
` |
தோடு செய் கொடி
நலோன் துளங்க, நாயகன்,
வீடு செய் நயத்தொடு விரும்பி நோக்கினன்;
சேடு செய் கமல வாய் துளித்த தேன் உரைப்
பாடு செய் இன்னவை பரிவின் கூனினான் : |
இதழ்கள்
செறிந்த மலர்க் கொடியைத் தாங்கிய நல்லவனாகிய சூசை
துலங்குமாறு, ஆண்டவன், வான்வீட்டிற் பொருந்திய இன்பத்தோடு அவனை
விரும்பி நோக்கினான்; அழகுள்ள தாமரை மலர் போன்ற தன் வாயினின்று
துளித்த தேன் போன்ற சொல்லைக் கொண்டு, பின்வரும் இவற்றை
அன்போடு கூறினான் :
'உரைப்பாடு'
என்ற விடத்து, 'பாடு' என்பது தொழிற்பெயர் விகுதி.
8 |
உன்னுயிர்
தன்னினு மோம்பித் தாய்மக
னின்னுயிர் காத்தனை யினிப்ப யன்கொளீஇ
மன்னுயிர் பெறுங்கதி வானில் வந்துறீஇ
நின்னுயிர் வாழ்தலே நீதி யாமரோ. |
|
"உன் உயிர்
தன்னினும் ஓம்பி, தாய் மகன்
இன் உயிர், காத்தனை, இனி, பயன் கொளீஇ,
மன் உயிர் பெறும் கதி வானில் வந்து உறீஇ,
நின் உயிர் வாழ்தலே நீதி ஆம் அரோ. |
|