பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 704

     "கன்னித் தாயும் திருமகனுமாகிய இருவர் தம் இனிய உயிரை, நீ
உன் உயிரைக் காட்டிலும் பேணிப் பாதுகாத்தாய்; இனி, அதன் பயனை நீ
பெறக்கொண்டு, நிலையான மனித உயிர்கள் பெறுதற்குரிய கதியாகிய வான்
வீட்டில் வந்தடைந்து, உன் உயிர் என்றும் நிலையாக வாழ்தலே நீதியாகும்.

     'உற்று', 'கொண்டு' என்பன 'உறீஇ', 'கொளீஇ' எனச் சொல்லிசை
அளபெடை பெற்றன.

 
               9
ஆயினு மரிதனீ வளர்த்த வாண்டகை
தாயினு மன்பொடு தரணி காக்குப
வீயினு மன்றிமேல் வீடு றாதுட
லோயினு நீசெய்வ தோம்பிக் கேட்டியால்.
 
"ஆயினும், அரிதின் நீ வளர்த்த ஆண்டகை,
தாயினும் அன்பொடு தரணி காக்குப
வீயினும் அன்றி, மேல் வீடு உறாது, உடல்
ஓயினும், நீ செய்வது ஓம்பிக் கேட்டி ஆல்.

     "ஆயினும், அரிதாகப் பேணி நீ வளர்த்த, ஆண்களில் சிறந்த திருமகன்,
தாயினும் மிக்க அன்போடு இவ்வுலகை மீட்டுக் காக்கும்
பொருட்டு இறந்தாலன்றி, எவரும் வான்வீட்டை அடைய இயலாதாதலின்,
உயிர் பிரிந்து உன் உடல் ஓய்ந்த பின்னும், நீ செய்யத்தக்க தொன்றைப்
பேணிக் கேட்பாயாக.

 
               10
ஈடடைந் தருந்தவ மியன்ற முந்தையார்
நீடடைந் துறையுமென் றயைநி ழற்றிய
நாடடைந் திறையிறந் தளிக்கு நாளுறீஇ
வீடடைந் துவப்பரென் றருள்வி ளம்புவாய்.
 
"ஈடு அடைந்து, அருந் தவம் இயன்ற முந்தையார்,
நீடு அடைந்து உறையும் என் தயை நிழற்றிய
நாடு அடைந்து, இறை இறந்து அளிக்கும் நாள் உறீஇ
வீடு அடைந்து உவப்பர் என்று, அருள் விளம்புவாய்.