பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 705

     "அரிய தவங்களைச் செய்து இறந்த முன்னோர், அதனால் பெருமை
அடைந்து, நெடுங் காலமாய்ச் சென்று சேர்ந்து தங்கியிருப்பதும் எனது
தயவு நிழலிட்டுப் பேணுவதுமான அந்நாட்டை நீயும் அடைந்து, மனிதர்
பொருட்டு அத்திருமகன் இறந்து மீட்டுக் காக்கும் நாள் வந்ததும், தாமும்
வான்வீட்டை அடைந்து மகிழ்வரென்று, இவ்வருட் செய்தியை
அவர்களுக்குச் சொல்வாயாக.

     'உற்று' என்பது 'உறீஇ' எனச் சொல்லிசை அளபெடை ஆயிற்று.

 
               11
உடல்கடிந் துவந்துயி ருறையு நாடென
மடல்கடிந் தெரிபட வாடும் பூவிணை
யடல்கடிந் திளைத்தநின் னாக்கை நீக்கியிவ்
விடன்கடிந் தங்கணீ விரைவி லேகென்றான்.
 
"உடல் கடிந்து, உவந்து உயிர் உறையும் நாடு என,
மடல் கடிந்து எரி பட வாடும் பூ இணை
அடல் கடிந்து, இளைத்த நின் ஆக்கை நீக்கி, இவ்
இடன் கடிந்து அங்கண், நீ, விரைவில் ஏகு" என்றான்.

     "உடலை நீக்கி, மனித உயிர் மகிழ்ந்து தங்கும் நாடு அது ஆதலின்,
நீயும், தன் இதழ்கள் மீது சினந்து நெருப்புத் தாக்குதலால் வாடும் பூவுக்கு
நிகராக நோயால் தாக்கப்படுதலினின்று நீங்கி, விரைவில் அவ்விடம்
செல்வாயாக" என்றான்.

 
              12
என்றலோ டுயிர்தனி லினிய மைந்தனு
மன்றலோ டியைந்தமா மரியு நீக்கலே
பொன்றலோ டுலைக்கினு பொலிதி ருவுளத்
தொன்றலோ டினிதிலென் றுணர்விற் றேறினான்.
 
என்றலோடு, உயிர் தனில் இனிய மைந்தனும்
மன்றலோடு இயைந்த மாமரியும் நீக்கலே
பொன்றலோடு உலைக்கினும், பொலி திரு உளத்து
ஒன்றலோடு இனிது இல் என்று, உணர்வில் தேறினான்.

     என்று தந்தையாம் ஆண்டவன் கூறவுமே, உயிரைக்காட்டிலும்
தனக்கு இனிய திருமகனையும் திருமணத்தோடு மனைவியாய் அமைந்த