சிறந்த மரியாளையும் விட்டுப் பிரிதலே இறத்தலைக் காட்டிலும் தன்னை
வருந்தியதேனும், ஆண்டவனின் சிறந்த திருவுளத்தோடு ஒன்றி
அமைதலைக் காட்டிலும் இனியது ஒன்று மில்லையென்று, சூசை தன்
மனத்தில் தெளிந்தான்.
சூசையின்
இறப்பு
-
விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா
13 |
களிமுகத்
திணங்கி யன்னான் கடவுளைப் பணியும் வேலை
வெளிமுகத் துற்ற காட்சி மின்னென மறைந்து தானே
யொளிமுகத் திலங்கிச் சூழ வுவப்புற மகனுந் தாயு
மளிமுகத் திறுப்ப நோக்கி யறைதல்பே ருயிர்ப்போ டுற்றான். |
|
களி முகத்து இணங்கி,
அன்னான், கடவுளைப் பணியும் வேலை,
வெளி முகத்து உற்ற காட்சி மின் என மறைந்து, தானே
ஒளி முகத்து இலங்கி, சூழ உவப்பு உற மகனும் தாயும்
அளி முகத்து இறுப்ப நோக்கி, அறைதல் பேர் உயிர்ப்போடு
உற்றான் : |
அவன்,
மகிழ்ந்த முகத்தோடு அதற்கு இணங்கிக் கடவுளைப்
பணிந்து தொழும்போது, வெளிப் படையாக முன் தோன்றிய காட்சி
மின்னல் போல் மறையவும், தான் ஒளி நிறைந்த முகத்தோடு விளங்கி,
தன்னைச் சூழ்ந்து திருமகனும் தாயும் மகிழ்ச்சியோடும் கருணை
முகத்தோடும் தங்கியிருத்தலைக் கண்டு, பெருமூச்சோடு பின்வருமாறு
சொல்லலானான் :
பெருமை
+ உயிர்ப்பு : பெரு + உயிர்ப்பு : பேர் + உயிர்ப்பு =
பேருயிர்ப்பு.
14
|
ஓரியல் பாக
வுன்னோ டோரென்பான் பணித்த வேவல்
பேரியல் பறிவிற் கண்டாய் பிரிதலே வேண்டு மிஃதே
சூரியல் துன்பத் தெல்லாந் துன்பமாய் வருத்து மாகிற்
சீரியல் பியற்றுந் தேவ திருவுள நன்றி னன்றே. |
|
"ஓர் இயல்பு
ஆக, உன்னோடு ஓர் என்பான் பணித்த ஏவல்,
பேர் இயல்பு அறிவின் கண்டாய், பிரிதலே வேண்டும். இஃதே,
சூர் இயல் துன்பத்து எல்லாம் துன்பமாய் வருத்தும் ஆகில்,
சீர் இயல்பு இயற்றும் தேவ திருவுளம் நன்றின் நன்றே.
|
|