"ஒரே
தெய்வ இயல்பு இருவரும் கொண்டுள்ளமையால், உன்னோடு
ஒருவனாக அமைந்துள்ள தந்தையாம் ஆண்டவன் இட்ட கட்டளையை,
நீயும் உனது பெரியதும் இயற்கையானதுமான தெய்வீக அறிவினால் பிறர்
காட்டாமலே கண்டுள்ளாய். நாம் பிரிதலே வேண்டும். இது, வருத்தும்
இயல்புள்ள துன்பத்துளெல்லாம் பெருந் துன்பமாக நம்மை வருத்துமாயினும்,
சிறந்த இயல்போடு எல்லாம் நடத்தும் தெய்வத் திருவுளம்
நன்மைகளிலெல்லாம் மேலான நன்மையாகும்.
15 |
லமைந்தனே
மைந்த னென்ப வரமெனக் களித்தி நீயே
தந்தநே ரகன்ற நன்றி தனக்கெனாற் கைம்மா றென்னோ
சிந்தனே ரெனக்குச் செய்த சீரள விடுக்கண் யாவுங்
கொந்தனேர் விளையக் கொய்தி கொய்தருள் விளைத்தி
நல்லோய். |
|
"மைந்தனே, மைந்தன்
என்ப வரம் எனக்கு அளித்தி நீயே,
தந்த நேர் அகன்ற நன்றி தனக்கு எனால் கைம்மாறு என்னோ?
சிந்தல் நேர் எனக்குச் செய்த சீர் அளவு, இடுக்கண் யாவும்,
கொந்தல் நேர், விளையக் கொய்தி; கொய்து அருள் விளைத்தி,
நல்லோய்!
"மகனே, |
நான்
உன்னை மகனென்று அழைக்க நீயே எனக்கு வரம் தந்தாய்.
இவ்வாறு எனக்குத் தந்த ஒப்பற்ற நன்மைக்கு என்னால் ஆகும் கைம்மாறு
யாதோ? பொழிந்தாற்போல் எனக்கு நீ தந்த சிறப்பின் அளவாக, சினந்தாற்
போல், துன்பங்கள் யாவற்றையுமே விளைந்த பயனாகக் கொய்ந்தெடுத்தாய்;
அவ்வாறு கொய்தெடுத்தும் நல்லவனே, எனக்குக் கருணையே
விளைவித்தாய்.
அளித்தி,
கொய்தி, விளைத்தி என்பன இறந்தகால வினைமுற்றுகள்.
அடுத்த பாடலில் தருதி என்பது ஏவல், எதிர்காலம்.
16 |
நிந்தையென்
றுடைநா னோங்க நிமிர்ந்தவான் வியப்ப
வென்னை
யெந்தையென் றனைநீ யுந்தைக் கிரங்கிநல் லாசி தேவ
தந்தையின் பணியைச் செய்யத் தருதியென் றடியில் விழச்
சிந்தையி னெழுந்த தாற்றாத் திருமகன் றாங்கி னானே. |
|