தன்
கன்னிமைக்கும் பழுதில்லாமல் தெய்வ மகனுக்குத் தாயும்
ஆனது மரியாளுக்கு வெற்றியாயிற்று. நவி - நவ்வி : அழகு; 'நவி' என
இடைக்குறை விகாரம் பெற்றது. நாதன் கன்னியிடம் மைந்தனான செய்தி :
முன் 7-வது ஐயந்தோற்று படலம், 1 - 22 காண்க,
11 |
கண்கவர்
வனப்பிற் றூது
கபிரியே
லுரைத்த காலை
பண்கவர் மொழிநற் கன்னி
பயன்பட
வெலிச பெத்தை
மண்கவர் கருப்பந் தாங்கி
மகிழ்ந்தன
காதை கூற
விண்கவ ரரசா ளோங்கி
விளைந்தபல்
லுணர்வு முற்றாள். |
|
கண் கவர் வனப்பின்
தூது கபிரியேல் உரைத்த காலை,
பண் கவர் மொழி நற் கன்னி பயன்பட, எலிசபெத்தை
மண் கவர் கருப்பம் தாங்கி மகிழ்ந்தன காதை கூற,
விண் கவர் அரசாள் ஓங்கி, விளைந்த பல் உணர்வும் உற்றாள். |
அவதாரச்
செய்தி பற்றிக் கபிரியேல் கண்ணைப் பறிக்கும்
அழகோடு சென்று தூது உரைத்தான். அப்பொழுது, இசையையும் தன்
இனிமையால் கவரும் சொல்லைப் பேசும் நல்ல கன்னி மரியாள் தன் தூதுச்
செய்தியின் பயனை உணருமாறு, எலிசபெத்தை மண்ணுலகெல்லாம்
வியக்குமாறு கருப்பம் தாங்கி மகிழ்ந்த செய்தியை எடுத்துக் கூறினான்.
விண்ணுலகத்தார் மனத்தைக் கவர்ந்த அரசியாகிய மரியாள் அதனைக்
கேட்டு எழுச்சி பெற்றாள்; அவதாரச் செய்தியால் விளைந்த பல்வகை
உணர்வும் அடைந்தாள்.
எலிசபெத்தை
மகிழ்ந்த காதை : 7 : 14 காண்க. மகிழ்ந்தன -
'மகிழ்ந்த' என்ற பெயரெச்சம் இடையே 'அன்' சாரியை பெற்று வந்தது.
காதை - கதை என்பதன் நீட்டல் விகாரம்; இங்கே 'செய்தி' என்ற
பொருளில் வந்தது.
|