12 |
பூவிடைக்
குளித்த தேன்போற்
புதல்வனாய்த்
தான்சூற் பூண்ட
மூவிடைப் புரக்குங் கோன்முன்
முதிரருட்
டூதா யெய்திக்
கூவிடைப் பொதுவற் றுற்ற
குழவியை
மருவத் தானே
பாவிடைப் புகழின் மிக்க
பயன்கொள்வா
னெனக்கண் டுற்றாள். |
|
பூவிடைக் குளித்த
தேன் போல் புதல்வனாய்த் தான் சூல் பூண்ட
மூ இடைப் புரக்கும் கோன் முன் முதிர் அருள் தூதாய் எய்தி,
கூவிடைப் பொது அற்று உற்ற குழவியை மருவ, தானே
பாவிடைப் புகழின் மிக்க பயன் கொள்வான் எனக் கண்டு உற்றாள். |
மூவுலகங்களையும்
ஆளும் மன்னனாகிய ஆண்டவனை மரியாள்
பூவினுள் மறைந்து கிடக்கும் தேன் போல் தன் மகனாய்க் கருப்பம்
தாங்கியுள்ளாள். அம்மன்னனுக்கு முன் செல்லும் அருள் தூதுவனாய்
அமைந்து, இவ்வுலகில் பொதுவற்ற சிறப்பு முறையில் எலிசபெத்தின்
குழந்தை பிறக்க உள்ளான். அக்குழந்தையைத் தான் அணுகச் சென்றால்,
அவன் பாக்களிற் சொல்லக் கூடிய புகழைக் காட்டிலும் மிக்க பயனைப்
பெறுவான். இவ்வாறெல்லாம் தெய்வக் காட்சியால் மரியாள் கண்டு
கொண்டாள்.
அடி
தோறும் முதற் சீரில் வந்த 'இடை' என்ற சொல்
இரண்டாமடியில் 'இடம்' என்ற பெயராகவும், ஏனையவற்றில் ஏழாம்
வேற்றுமை உருபாகவும் கொள்க, எலிசபெத்தை மலடியும் வயது
முதிர்ந்தவளுமாய்க் கொண்ட கருப்பம் பொது நீங்கிய சிறப்பு முறை
எனப்பட்டது.
13 |
பானலஞ் சினைகொள்
மேகம்
பகல்செய
விளங்கா தென்னோ
தேனலஞ் சினைகொள் பைம்பூத்
தேங்கம
ழாதோ தேவ |
|