'அம்மா'
இரக்கம் சுட்டும் இடைச் சொல். "அப்போது அவற்கு
அறுபது வயது இனிதின் நிறைந்ததென்று அறிக" என்பது பழைய உரை
அடிக் குறிப்பு.
20 |
மெய்யிலார்
நாட்டிற் றூது விளம்பமெய் யுயிர்விட் டேகிப்
பொய்யிலா வுயிரா யன்புட் புக்கெனக் கிடந்த யாக்கை
மையிலா மலர்ந்த கொம்போ வரைந்தநற் படமோ தோன்றி
நையிலாத் துயில்கொண் டென்ன நளியொளி வீசிற் றம்மா. |
|
மெய் இலார்
நாட்டில் தூது விளம்ப, மெய் உயிர் விட்டு ஏகி,
பொய் இலா உயிராய் அன்பு உள் புக்கு எனக் கிடந்த யாக்கை,
மை இலா மலர்ந்த கொம்போ, வரைந்த நல் படமோ தோன்றி,
நை இலாத் துயில் கொண்டு என்ன, நளி ஒளி வீசிற்று, அம்மா! |
உடல்
இல்லாதவராய்ப் புண்ணிய ஆன்மாக்கள் இருந்த நாட்டில்
தூது உரைக்கும் பொருட்டு, தன் உயிர் உடலைவிட்டுப் பிரிந்து போகவும்,
அன்பு, உண்மையான உயிராய் அவ்வுடலுக்குள் புகுந்தாற் போலக் கிடந்த
சூசையின் உடல், மாசில்லாது மலர்ந்த பூங்கொம்போ, வரைந்த நல்ல
சித்திரமோ என்னுமாறு தோன்றி, வாட்டம் இல்லாத தூக்கத்தில் ஆழ்ந்தாற்
போல, செறிந்த ஒளி வீசிற்று, அம்மா!
21 |
விதுவளர்
பதநல் லாளும் விண்வள ரரசர் கோனும்
பொதுவளர் முறைமே லன்ன பூட்சியைப் பேணி வானோர்
சதுவள ரணியிற் சூழ்ந்து தனிவளர் புகழ்ச்சி பாடி
மதுவளர் மலரைச் சிந்தி மலர்வனத் தடக்கி னாரே. |
|