பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 715

"மண் புலம் தவிர் நாம் களி மாந்திட,
கண் புலம் தவிர் தன் கவின் காட்ட, ஈங்கு
எண் புலம் தவிர் காந்தியோடு எய்திய,
விண் புலம் தவிர் விண்ணவனோ?" என்பார்.


     பாதலத்தவர் அவனைக் கண்டதும், "மண்ணுலகை விட்டு வந்த நாம்
இன்பம் நுகருமாறு, கண்ணாகிய பொறி கண்டறியாத தன் அழகை நமக்குக்
காட்டவென்று, எண்ணமென்னும், கருவியையும் கடந்த ஒளியோடு இங்கு
வந்தடைந்த, விண்ணுலகை நீங்கிய ஒரு வானவனோ இவன்?" என்பர்.

 
            30
ஆதி யீறிலா நாயக னம்புவி
மீதி லீறுயி ராகவி ளிந்தொரு
தீதி லாக்கதி வாயில்தி றந்தபின்
னேதி னாமடை மாட்சியி தோவென்பார்.
 

"ஆதி ஈறு இலா நாயகன், அம் புவி
மீதில், ஈறு உயிர் ஆக, விளிந்து, ஒரு
தீது இலாக் கதி வாயில் திறந்த பின்,
ஏது இல் நாம் அடை மாட்சி இதோ?" என்பார்.


     "தனக்குத் தொடக்கமும் முடிவும் இல்லாத ஆண்டவன், தனது
உயிருக்கு இறுதி நேருமாறு அழகிய மண்ணுலகில் மடிந்து, ஒரு தீதும்
அணுக முடியாத மோட்ச வாயிலைத் திறந்து வைத்த பின், குற்றமில்லாத
நாம் அடையவிருக்கும் மாட்சி இத்தகையது தானோ?" என்பர்.

 
              31
ஆயி னானுல கத்தைய ளித்தபின்
றாயி னாரரு டாங்கிய தன்மையான்
மீயி னாங்கதி வீட்டெமைச் சேர்த்திடத்
தூயி னானடை தோற்றமி தோவென்பார்.
 

"ஆயினான் உலகத்தை அளித்த பின்,
தாயின் ஆர் அருள் தாங்கிய தன்மையால்,
மீயின் ஆம் கதி வீட்டு எமைச் சேர்த்திட,
தூயினான் அடை தோற்றம் இதோ?" என்பார்.