பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 717

     "ஐயத்தாலும் ஆசையாலும் சோர்வு கொண்ட புண்ணியவாளரே,
உலகத்தாரின் பாவங்களைப் போக்கி, அந்நிலை பெற்ற உயிர்கள் தவறாமல்
உய்யும் பொருட்டு, தானே மனிதனாய் வந்து உதித்த உயர்ந்த கடவுள்,
உங்களுக்கு இன்பம் வழங்கக் கருதி, தானே இன்று இங்கே அனுப்பி
வைத்த ஒரு தூதுவனாவேன் அடியேன்.

 
                    34
தூயாக மறைவடிவாய்த் தொக்கிணைவெல் மாட்சிமையா
டாயாகக் கன்னியுமாய்த் தாரணிமே லரிதீன்ற
சேயாக வெம்மிறையோன் சென்றையைந் தோராண்டாய்த்
தீயாக வருத்துவினை தீர்த்திடுநா ணண்ணியதே.
 
"தூய் ஆக, மறை வடிவுஆய், தொக்கு இணை வெல் மாட்சிமையாள்
தாய் ஆக, கன்னியும் ஆய், தாரணி மேல் அரிது ஈன்ற
சேய் ஆக எம் இறையோன் சென்று, ஐ ஐந்து ஓர் ஆண்டு ஆய்,
தீ ஆக வருத்து வினை தீர்த்திடும் நாள் நண்ணியதே.

     "தான் தூயவளாய் இருந்து, வேத வடிவாய் அமைந்து, ஒப்பெல்லாம்
கடந்து வென்ற மாட்சி உடையவளாகிய ஒரு பெண், தாயாகவும், அதே
நேரத்தில் கன்னியாகவும் அமைந்து, இவ்வுலகில் அரியதொரு முறையால்
பெற்றெடுத்த மகனாக நம் ஆண்டவன் வந்து தோன்றி, ஐயைந்து
இருபத்தைந்தும் ஒன்றும் கூடி இருபத்தாறு ஆண்டுகள் ஆகியுள்ளமையால்,
நெருப்பைப் போல் வருத்தும் பாவ வினையை அவ்வாண்டவன் தீர்த்து
வைக்கும் நாள் நெருங்கியுள்ளது.

 
                        35
அன்னவட்கே மணத்துணையா யன்னவளாங் கினிதுயியர்ந்த
மன்னவற்கே கைத்தாதை வரமுளனா யீங்கடியே
னின்னவற்கே தூதுற்றே னிந்நாளுஞ் சிறைநீங்கிப்
பின்னவற்கே வீட்டிறுணை பெரிதுவப்பீ ரின்யென்றான்.
 
"அன்னவட்கே மணத் துணை ஆய், அன்னவள் ஆங்கு இனிது உயிர்த்த
மன்னவற்கே கைத் தாதை வரம் உளன் ஆய், ஈங்கு அடியேன்