பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 719

                   37
ஆரணனே யாரணஞ்சேர் கொழுகொம்பே யரிதுவப்பக்
காரணனே கண்டணைத்த கைத்தாதை யேயருளாற்
பூரணனே நாம்விழைந்த பொழுதடைந்தா யின்பமலி
வாரணனே தவத்தாசைக் கரைகண்டாய் வரத்தவனே.
 
"ஆரணனே, ஆரணம் சேர் கொழுகொம்பே, அரிது உவப்ப,
காரணனே கண்டு அணைத்த கைத் தாதையே, அருளால்
பூரணனே, நாம் விழைந்த பொழுது அடைந்தாய்; இன்பம் மலி
வாரணனே, தவத்து ஆசைக் கரை கண்டாய், வரத்தவனே!

     "வேத வடிவானவனே, வேதமென்றும் கொடி பற்றிப் படரும் கொழு
கொம்பாய் அமைந்தவனே, அரிய மகிழ்ச்சி கொள்ளுமாறு, எல்லாவற்றிற்கும்
முதற் காரணமான கடவுளையே கண்ணாற் கண்டு மார்போடு அணைத்துக்
கொண்ட வளர்ப்புத் தந்தையே, தெய்வ அருளால் நிறைந்தவனே, இன்பம்
நிறைந்த கடலுக்கு ஒப்பானவனே, வரத்தில் உயர்ந்தவனே, நாங்கள் விரும்பி
எதிர்பார்த்திருந்த பொழுது நீ இங்கு வந்து சேர்ந்தாய்; தவ மேம்பாட்டால்
ஆசைக்கு அளவான இன்பத்தில் கரையைக் கண்டு கொண்டாய்!

 
                     38
முக்காலங் காட்டுமொளி முகவிளக்காந் தவத்தொடுநா
மக்காலங் காண்மறைவி லாங்குரைத்த நாதனைநீ
யிக்காலங் காட்டினையே யேந்தினையே வளர்த்தனையே
மெய்க்காலங் காட்டியவான் வேந்தனிலை விளம்பென்றார்.
 
"முக் காலம் காட்டும் ஒளி முக விளக்கு ஆம் தவத்தொடு, நாம்
அக் காலம் காண் மறைவில் ஆங்கு உரைத்த நாதனை நீ
இக் காலம் காட்டினையே! ஏந்தினையே! வளர்த்தனையே!
மெய்க் காலம் காட்டிய வான் வேந்தன் நிலை விளம்பு" என்றார்.

     "மூன்று காலங்களையும் ஒருங்கு காட்டும் ஒளி முக விளக்காகிய
தவத்தை மேற்கொண்டு, நாங்கள் அக்காலத்தில் கண்ட மறைவான
தோற்றத்தோடு அங்கு எடுத்துச் சொல்லிய ஆண்டவனை, நீ இக்காலத்தில்
மறைவில்லாமல் கொண்டு காட்டியுள்ளாயே! அவனைக் கையால்