"அத்
திருமைந்தன் நோய் வாய்ப்பட்டவர்க்கு இன்பம் கூர்ந்த
உயிர் தரும் மருந்துக்கு ஒப்பாவான்; நெருப்பைப் போன்ற பாவங்களைக்
கொண்டுள்ளவர்க்குக் குளிர்ச்சி பொருந்திய மழைக்கு ஒப்பாவான்; தன்
உள்ளத்தின் அமைப்பால் மலருக்கு ஒப்பாவான்; பரந்த இரக்கத்தால்
கடலுக்கு ஒப்பாவான்; உலகத்தார் அனைவருக்கும் தாய் போல்வான்;
தந்தையும் போல்வான்.
41 |
மீனொக்கப்
பாவவிருள் விலகமிளிர் விழிகொண்டான்
கானொக்க மறையுமிழக் கமழ்கமல வாய்கொண்டான்
றேனொக்கத் துயர்க்கைப்புச் சிதைப்பவினி துரைகொண்டான்
வானொக்கக் கவின்காட்ட மலர்வதன நலங்கொண்டான். |
|
"மீன் ஒக்க,
பாவ இருள் விலக, மிளிர் விழி கொண்டான்;
கான் ஒக்க மறை உமிழ, கமழ் கமல வாய் கொண்டான்;
தேன் ஒக்க, துயர்க் கைப்புச் சிதைப்ப, இனிது உரை கொண்டான்;
வான் ஒக்க, கவின் காட்ட, மலர் வதன நலம் கொண்டான். |
"அத்திரு
மகன், பாவமாகிய இருள் விலகுமாறு, விண்மீனைப்
போன்று இலங்கும் கண்களைக் கொண்டவன்; வேதத்தை மணம் பொருந்த
எடுத்துக் கூறும் வண்ணம், மணம் கமழும் தாமரை மலர் போன்ற வாயைக்
கொண்டவன்; துயரத்தின் கசப்பை ஒழிக்கும் வண்ணம், தேனைப் போன்று
இனிதான சொல்லைக் கொண்டவன்; தன் அழகை எடுத்துக் காட்ட, வானம்
போல் மலர்ந்த முகம் கொண்டவன்.
42 |
தீ தொருங்கு
மலிபறியாத் திளையருளார் நெஞ்சத்தான்
கோதொருங்குங் குறையொருங்குங் குறைத்தொழிக்கும்
புயற்கரத்தா
னீதொருங்குந் தோற்றுவிக்கு நெறிவழுவா வறப்பதத்தான்
வாதொருங்குஞ் சிதைத்தலகை வெல்நாம வயவேலான். |
|