பேர்நல மணிக்
குன்று உச்சியின் பெயர்ந்து பெருகி வீழ் வெள்ளம் ஒத்து,
அன்னான்
சீர் நலத்து உரைத்த திவ்விய மதுர சீரிய தேன் உரை கேட்டு, ஆங்கு
ஆர் நல தவத்தோர் களிப்பு உறிநிற்ப, "அன்புமிக்கு என் மகள் ஈன்ற
ஏர் நல புதல்வற்கு உற்றவை அறைதி" என்றனள், அன்னமை என்பாள். |
பேரழகு
வாய்ந்த நீல மணிபோன்ற மலை உச்சியினின்று பெயர்ந்து
பெருகிப் பாயும் வெள்ளம் போன்று, அவன் சிறந்த நலத்தோடு உரைத்த
திவ்விய மதுரம் பொருந்திய சிறந்த தேன் போன்ற இனிய சொல்லைக்
கேட்டு, அங்கு நிறைந்த நல்ல தவம் உடையோர் மகிழ்வுற்று நிற்க,
அன்னமை என்பவள், "அன்பு மிகக் கொண்டு என் மகள் மரியாள் பெற்ற
அழகு வாய்ந்த நல்ல திரு மகனுக்கு நேர்ந்தவற்றைச் சொல்லுவாய்"
என்றாள்.
| 46 |
நனைவருங்
கொடியோ னிவ்வுரை கேட்டு
நசைகொடாய்
மகிழமற் றங்க
ணனைவரு முவப்பக் கன்னிமை முகையோ
டங்கனி
கனிந்தென மரியே
புனைவருங் கன்னி தாய்வரத் திசைப்பப்
புகழ்வருந்
தேவசூற் கொண்டு
வினைவரு மைய முற்றவா றதனை
விட்டவா
றொருங்கெலா முரைத்தான். |
| |
நனை வருங் கொடியோன்
இவ் உரை கேட்டு, நசை கொள்
தாய் மகிழ, மற்று அங்கண்
அனைவரும் உவப்ப, கன்னிமை முகையோடு அம்கனி கனிந்து
என, மரியே,
புனைவு அருங் கன்னி தாய் வரத்து இசைப்ப, புகழ்வு
அருந்தேவ சூல் கொண்டு,
வினை வரும் ஐயம் உற்ற ஆறு, அதனை விட்ட ஆறு ஒருங்கு
எலாம் உரைத்தான். |
|