பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 726

               48
கொன்விளை வெருவிற் புழுங்கிய வரசன்
     கொடும்பகைக் கஞ்சிய பாலா
லின்விளை நாடு மினமுநீத் திழந்தே
     யெசித்திடத் தெய்திய வாறும்
பொன்விளை சிறப்பிற் கோயிலு முருவும்
     பொய்விளை தேவரோ டங்கண்
மின்விளை யொளிசெய் திருமகன் முகத்தில்
     வீழ்ந்தொருங் கொழிந்தன வாறும்.
 

கொன்விளை வெருவின் புழுங்கிய அரசன் கொடும் பகைக்கு
                              அஞ்சிய பாலால்,
இன்விளை நாடும் இனமும் நீத்து இழந்தே எசித்திடத்து எய்திய
                              ஆறும்,
பொன்விளை சிறப்பின் கோயிலும் உருவும், பொய்விளை
                              தேவரோடு, அங்கண்,
மின்விளை ஒளிசெய் திருமகன் முகத்தில், வீழ்ந்து ஒருங்கு
                              ஒழிந்தன ஆறும்,


     வீணே விளைந்த அச்சத்தால் சினந்த எரோது மன்னனின் கொடிய
பகைக்கு அஞ்சிய தன்மையாய், இன்பம் விளைவிக்கும் தம் நாட்டையும்
இனத்தாரையும் இழந்து நீங்கி மூவரும் எசித்து நாடு சென்று சேர்ந்த
விதமும், அங்கே, மின்னல் போன்ற ஒளியைத்தரும் திருமைந்தன்
முகத்தைக் கண்டதும், பொய்யின் அடிப்படையில் உருவான தேவர்களோடு,
பொன்னாற் செய்த சிறப்புள்ள கோவில்களும் உருவச்சிலைகளும் ஒருங்கே
சிதறி வீழ்ந்து ஒழிந்த விதமும்.

 
                    49
ஒளிவளர் பிறைபோல் வளர்ந்தவன் மலர்த்தா
     ளூன்றிமுன் னடந்தன வாறுங்
களிவள ருவப்பி லெம்வினை தீரக்
     கனிந்தசொற் றொடங்கிய வாறும்
வளிவள ராடி யேழுபோய் மீண்டு
     வந்துநா டடைந்தன வாறுந்
தெளிவள ருரையி லினையவும் பலவுஞ்
     செழுந்தவன் செப்பிமீண் டுரைத்தான்.
 
ஒளிவளர் பிறைபோல் வளர்ந்து, அவன், மலர்த்தாள் ஊன்றி முன்
                                   நடந்தன ஆறும்,
களிவளர் உவப்பில் எம் வினை தீரக் கனிந்த சொல் தொடங்கிய
                                   ஆறும்,