பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 727

வளிவளர் ஆடி ஏழு போய், மீண்டு வந்து நாடு அடைந்தன ஆறும்,
தெளிவளர் உரையில், இனையவும் பலவும், செழுந்தவன் செப்பி,
                                    மீண்டு உரைத்தான்:


     அத்திருமகன், ஒளி வளரும் பிறை போல் வளர்ந்து, தன் மலர்
போன்ற கால்களை ஊன்றி முன்னே நடக்கத் தொடங்கிய விதமும், இன்பம்
வளரும் மகிழ்ச்சியோடு நம் பாவ வினையைத் தீர்க்கும் பொருட்டுக்
கனிவான சொல்லைப் பேசத் தொடங்கிய விதமும், காற்று மிகுதியாய் வீசும்
ஆடி மாதம் ஏழு கழிந்து, திரும்ப வந்து தன் நாட்டை அடைந்த விதமும்,
இவை போன்ற பலவும், செழுமையான தவங்கொண்ட சூசை தெளிவு மிக்க
சொல்லால் எடுத்துரைத்து, மீண்டும் பின்வருமாறு தொடர்ந்து
சொல்லலானான்:

     'ஆடி' ஆண்டிற்கு ஒரு முறையே வருதலின், 'ஆடி ஏழு' என்பது,
ஏழாண்டுகளைக் குறிக்கும். நம் என்பதன் பொருளில் எம் என்பதைக்
கொள்ளுதல் முனிவர் மரபு.

 
                      50
மணிக்கலத் தமிர்த மேந்திய நெஞ்சான்
     வையகத் தியற்றிய யாவும்
பணிக்கலத் துரைப்ப தென்னினி யானே
     பகர்வதுஞ் செய்வது மொருங்கே
யணிக்கலத் திருமா மணியெனத் தயையு
     மன்புமா யொருப்படத் தானே
பிணிக்கலத் தெடுத்த வுடலொன்றே யெல்லாப்
     பிறருயிர்க் குயிரெனக் கொண்டான்.
 

"மணிக் கலத்து அமிர்தம் ஏந்திய நெஞ்சான், வையகத்து இயற்றிய
                                   யாவும்,
பணிக் கலத்து உரைப்பது என் இனி யானே? பகர்வதும் செய்வதும்
                                   ஒருங்கே,
அணிக் கலத்து இரு மா மணி என, தயையும் அன்புமாய் ஒருப்பட,
                                   தானே
பிணிக் கலத்து எடுத்த உடல் ஒன்றே, எல்லாப் பிறர் உயிர்க்கு உயிர்
                                   எனக் கொண்டான்.