"மாணிக்கக்
காலத்தில் அமிழ்தம் இட்டு ஏந்தியது போன்ற நெஞ்சம்
படைத்த அத் திருமைந்தன், இம் மண்ணுலகில் செய்த எல்லாவற்றையும்,
வேலைப்பாடு அமைந்த அணி போல் நான் இனி எடுத்துரைப்பது எவ்வாறு?
தான் சொல்வதும் செய்வதும் ஒருங்கே, அழகிய அணிகலனில் பதித்த
இரண்டு சிறந்த மாணிக்கங்கள் போல், இரக்கமும் அன்புமாய் அமையுமாறு,
துன்பங்களுக்கு உறை விடமாகத் தான் எடுத்துக் கொண்ட உடல் ஒன்றே,
பிற உயிர்களுக்கெல்லாம் உயிரென்று அமையக் கொண்டுள்ளான்.
'இடும்பைக்கே
கொள்கலம் கொல்லோ குடும்பத்தைச் குற்றம்
மறைப்பான் உடம்பு' என்றும் குறள் (1029) கருத்து இங்கு நினைவுகூரத்
தக்கது.
51 |
ஓர்மரக்
கனியால் வந்ததீ தகற்றி
யொருங்குமன்
னுயிரெலா முவப்பப்
பேர்மரத் திறத்தல் வேண்டுமென் றதுவே
பெறற்கரு
நலந்தனக் கெனநோய்
கூர்மரச் சிலுவை தனக்கொர்செங் கோலே
கொலுவதே
யமளியே யென்னாச்
சூர்மரத் துயர்தா னிளமையிற் றொடங்கிச்
சுகமெனத்
துயில்கொள்வா னம்மா. |
|
ஓர் மரக் கனியால்
வந்த தீது அகற்றி, ஒருங்கு மன் உயிர் எலாம்
உவப்ப,
பேர் மரத்து இறத்தல் வேண்டும் என்று, அதுவே பெறற்கு அரும்
நலம்
தனக்கு என, நோய்
கூர் மரச் சிலுவை தனக்கு ஓர் செங்கோலே கொலு அதே அமளியே
என்னா
சூர் மரத்து உயர், தான் இளமையில் தொடங்கி, சுகம் எனத் துயில்
கொள்வான்,
அம்மா! |
"விலக்கப்பட்ட
ஒரு மரத்தின் கனியை உண்டதனால் விளைந்த
பாவத்தைப் போக்கி, நிலை பெற்ற மனித உயிர்களெல்லாம் ஒருங்கே
மகிழுமாறு, தான் ஒரு பெரிய மரத்தில் அறையுண்டு இறத்தல்
வேண்டுமென்று கண்டும், அதுவே தனக்குப் பெறுதற்கரிய சிறப்பு என்று
மதித்தும், துன்பம் மிக்க ஒரு மரச்சிலுவையே தனக்கு ஒரு செங்கோலும்
அரியணையும் மெத்தையும் ஆகுமென்று மதித்து, தான் இளமை தொட்டு,
|