துன்பம் தரும் ஒரு
சிலுவை மரத்தின் மேலே, அதுவே தனக்குச்
சுகமென்று துயில் கொள்வான்.
'அம்மா'
வியப் புணர்த்தும் இடைச் சொல்.
52 |
தன்னுயிர்
தனிலுந் தமரென மக்கட்
டகுதியை
மேவிய வன்பான்
மன்னுயி ருய்ந்தா லொழியவாங் கொழியா
வருத்தமே
தனக்கென நசைகொண்
டின்னுயிர் மெலிய விரங்கிய தன்மைத்
தெல்லையொன்
றில்லது மல்லா
லுன்னுயிர் வருந்த வுரைப்பதே தென்ன
வுளத்தினைத்
தருந்தவ னொந்தான். |
|
"தன் உயிர்
தனிலும், தமர் என, மக்கள் தகுதியை, மேவிய அன்பால்,
மன் உயிர் உய்ந்தால் ஒழிய ஆங்கு ஒழியா வருத்தமே தனக்கு என,
நசை
கொண்டு,
இன் உயிர் மெலிய இரங்கிய தன்மைத்து எல்லை ஒன்று இல்லதும்
அல்லால்,
உன் உயிர் வருந்த உரைப்பது ஏது?" என்ன, உளத்தில் நைந்து,
அருந்தவன்
நொந்தான் |
"மக்களைத்
தன் இனத்தாரென மதித்து, அம்மக்களின் மேன்மையைத்
தனது உயிரைக் காட்டிலும் மேலாக விரும்பிய அன்பினால், அம்மனித
உயிர்கள் மீட்பு அடைந்தாலொழியத் தனக்கு அங்கு நீங்காத வருத்தமே
அமையுமென்று மதித்து. அதன்மீதே ஆசை கொண்டு, தன் இனிய உயிர்
மெலியுமாறு அவன் இரங்கிய தன்மைக்கு எல்லை ஒன்றும் இல்லையென்று
சொல்வதேயல்லாமல், உன் உயிர் வருந்துமாறு மேலும் உரைப்பதற்கு என்ன
இருக்கிறது?" என்று கூறி, அரிய தவத்தோனாகிய சூசை தன் மனத்துள்
வருந்தி நொந்தான்.
|