வந்து, தானும் பெரிது
ஏங்கி வருந்துமாறு, மனிதனாகிய எனக்கு நிகராய்
அமைந்தானோ! அவன் அருளிக் காக்கும் காலமும் இது தானோ!" என்பர்.
55 |
தன்பா லெல்லா
நன்றுள னாகித் தகைவல்லோன்
பின்பா லில்லா தேதுள துண்டோ பெறவஃதை
யென்பா லெல்லா நோயுளனாகி யிவணெய்த
வன்பா லெல்லா வொப்பில னாய வரசென்பார். |
|
"தன் பால் எல்லா
நன்று உளன் ஆகி, தகை வல்லோன்,
பின் பால் இல்லாது ஏது உளது உண்டோ? பெற அஃதை
என் பால், எல்லா நோய் உளன் ஆகி இவண் எய்த,
அன்பால் எல்லா ஒப்பு இலன் ஆய அரசு!" என்பார். |
"வல்லமைத்
தகுதியெல்லாம் கொண்ட ஆண்டவன், எல்லா நன்மையும்
தன்னிடத்துக் கொண்டவனாதலின், பின்னும் தன்னிடத்து இல்லாததென்று
ஏதேனும் உண்டோ? அவ்வாறான ஒன்றை என்னிடத்துப் பெற
எண்ணியவன் போல், எல்லாத் துன்பங்களுக்கும் உட்பட்டவனாகி
இம்மண்ணுலகை வந்தடைந்தமையால், அவனே அன்பால் எல்லா ஒப்பும்
கடந்தவனாகிய அரசன்!" என்பர்.
56 |
வாழ நாமுந்
தானழு தானழு வானோ வளர் நீணாள்
மூழ நாமுந் தான்மடி வானோ முழுமுந்நீ
ராழ நாமுந் தாழ்ந்துறி னெந்தை யருளாழி
சூழ யாருண் டோவிதி லுண்டோ துறையென்பார். |
|
"வாழ நாமும்
தான் அழுவானோ? வளர் நீள் நாள்
மூழ நாமும் தான் மடிவானோ? முழு முந்நீர்
ஆழ நாமும் தாழ்ந்து உறின், எந்தை அருள் ஆழி
சூழ யார் உண்டோ? இதில் உண்டோ துறை?" என்பார். |
"பாவிகளாகிய
நாமும் வாழ்வு பெறும்பொருட்டுத் துன்பத்தால் நைந்து
தான் அழுவானோ? முடியாது வளரும் நீண்ட வாழ் நாளை நாமும் செறியக்
கொள்ளும் பொருட்டுத் தான் இறப்பானோ? முழுக் கடலின் ஆழம் வரை
நாமும் தாழ்ந்து சென்றாலும் நம் தந்தையாகிய ஆண்டவனின் அருளாகிய
|