கடலை ஆராய்ந்து காண
யாராலும் இயல்வதோ? இவ்வருட் கடலுக்குத்
தங்கு துறையும் உண்டோ?" என்பர்.
57 |
எல்லை யில்லை
யென்றவ னன்பிற் கிணைகூற
வல்லை யில்லை யென்றது பொய்யோ வசைமண்ணர்
தொல்லை யில்லை யென்றுள நாளுந் தொடர்தீ தொப்
பில்லை யில்லை யென்றது பொய்யோ விது மென்பார். |
|
"எல்லை இல்லை
என்று, அவன் அன்பிற்கு, இணை கூற,
வல்லை இல்லை என்றது பொய்யோ? வசை மண்ணர்,
தொல்லை இல்லை என்று, உள நாளும் தொடர் தீது ஒப்பு
இல்லை இல்லை என்றது பொய்யோ இதும்?" என்பார்.
|
"அவன்
அன்பிற்கு எல்லை இல்லை என்பதனோடு, அதற்கு
ஒப்புக்கூற வல்லமையும் எவருக்கும் இல்லை என்றது பொய்யோ? இழிவு
கொண்ட மண்ணுலகத்தோர், பண்டை நாளில் செய்த தீதுமட்டுமே இல்லை
என்னுமாறு, உலகம் உள்ள நாளெல்லாம் தொடர்ந்து செய்யும் தீமைகளுக்கு
ஒப்பு இல்லவேயில்லை என்ற இதுவும் பொய்யோ?" என்பர்.
'தொன்னம்'
என்பது 'தொல்லை' என நின்றது : 'வன்னம்' என்பது
'வல்லை' எனப் பண்புப் பெயராய் நின்றது.
58 |
அன்பிற்
குண்டோ மாத்திரை யாக வளவெம்பான்
முன்பிற் குண்டோ வோர்பயன் வானாள் முதல்வற்கே
யென்பிற் குண்டோ வெஃகுமோர் நன்றி யிவையாகிப்
பின்பிற் குண்டோ மானிட ராசை பெறவென் பார். |
|
"அன்பிற்கு உண்டோ
மாத்திரை ஆக அளவு? எம் பால்
அன்பிற்கு உண்டோ ஓர் பயன்? வான் ஆள் முதல்வற்கே
என்பிற்கு உண்டோ வெஃகும் ஓர் நன்றி? இவை ஆகி,
பின்பிற்கு உண்டோ மானிடர் ஆசை பெற?" என்பார். |
|