"ஆண்டவனின்
அன்பிற்கு வரையறையாக ஓர் அளவு உண்டோ?
முன்னோ பின்னோ அவன் நம்பால் பெறக் கூடிய ஒரு பயன் உண்டோ?
வானுலகை ஆளும் முதல்வனாகிய ஆண்டவனுக்கு உடலெடுத்துக்
கொள்வதனால் விரும்பத்தக்க நன்மை ஏதேனும் உண்டோ?
இவையெல்லாம் நிகழ்ந்திருக்க, மானிடர் பின்னு ஆசை கொண்டு தேட
ஏதேனும் உண்டோ?" என்பர்.
என்பு
- எலும்பு : இங்கே, உடலுக்குச் சினை ஆகுபெயர்.
59 |
அணியே யன்பே
யன்பது சிந்தே யருள் வேந்தே
மணியே யுன்பே ரார்வநி கர்ப்ப வலருண்டோ
பிணியே கொண்டாய் பேரர சாகி மனிதர்க்கே
பணியே நின்றா யுன்றையை யீதோ பரிசென்பார். |
|
"அணியே, அன்பே,
அன்பு அது சிந்தே, அருள் வேந்தே,
மணியே! உன் பேர் ஆர்வம் நிகர்ப்ப வலர் உண்டோ?
பிணியே கொண்டாய்; பேர் அரசு ஆகி மனிதர்க்கே
பணியே நின்றாய்; உன் தயை ஈதோ பரிசு?" என்பார். |
"அணிகலனே,
அன்பே, அன்பின் கடலே, அருள் மன்னனே,
மணியே! உனது பேரன்பிற்கு இணையாகச் செய்ய வல்லவர் உண்டோ?
எமக்காகத் துன்பங்களை ஏற்றுக் கொண்டாய்; பேரரசனாக நீ இருந்தும்,
மனிதருக்குப் பணி செய்ய நின்றாய் : உன் தயவுக்கு இதுதானோ பரிசு?"
என்பர்.
60 |
இவ்வா யெஞ்சா
நாடொறு மன்னா ரிசைபாடி
மெய்வ்வாய் வல்லோன் சூசையு ரைப்ப விழைவோங்கு
யுவ்வா யின்னா நீங்கிய மிக்கோ ருருகுள்ளச்
செவ்வாய் துய்த்த திவ்விய வின்பந் திதிவிள்ளா. |
|
இவ் வாய், எஞ்சா
நாள்தொறும் அன்னார் இசை பாடி,
மெய் வாய் வல்லோன் சூசை உரைப்ப, விழைவு ஓங்கி,
உவ்வு ஆய், இன்னா நீங்கிய மிக்கோர், உருகு உள்ளச்
செவ் வாய் துய்த்த திவ்விய இன்பம் திதி விள்ளா. |
|