இவ்வாறு,
அவர்கள் நாள்தோறும் குறைவின்றி இசை பாடியும்,
வல்லவனாகிய சூசை தன் மெய் வாயால் நாள் தோறும் இன்னும் பல
சொல்லவுமாக அவர்கள் விருப்பம் மேலோங்கி நின்றனர். தவங்களைச்
செய்துள்ளமையால் துன்பம் நீங்கப் பெற்ற அம் மேலோர், உருகிய தம்
உள்ளமாகிய சிவந்த வாயால் நுகர்ந்த திவ்விய இன்பங்களின் நிலைமை
மாறாது.
தூதுரைப்
படலம் முற்றும்
ஆகப்
படலம் 34க்குப் பாடல்கள் 3396
|