பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 735

முப்பத்தைந்தாவது
 

உத்தானப் படலம்
 

 

     அவதரித்த ஆண்டவன் மனிதருக்காகப் பாடுபட்டு இறந்து
உயிர்த்தெழுகையில், சூசையும் அவனோடு உயிர்த்தெழுந்த செய்தி கூறும்
பகுதி.

                 திருமகன் அருட் செயல்கள்

      - விளம், - விளம், - மா, கூவிளம்.

 
                     1
இன்னவை யங்கனி லீனிதி லாகையி
லுன்னவை யுன்னிய வுரிமைத் தாக்கினோன்
பன்னவை பயந்தபேய் பகைத்த மன்னுயிர்
துன்னவை யாவையுந் துடைத்த லோர்ந்துளான்.
 

இன்னவை அங்கணில் இனிதில் ஆகையில்,
உன் அவை உன்னிய உரிமைத்து ஆக்கினோன்,
பல் நவை பயத்த பேய் பகைத்த மன் உயிர்
துன் நவை யாவையும் துடைத்தல் ஓர்ந்து உளான்.


     இவையெல்லாம் அங்கு இனிதே நிகழ்கையில், நினைத்தவற்றை
யெல்லாம் நினைத்த உரிமையோடு ஆக்கி முடித்தவனாகிய திருமகன், பல
தீமைகளையும் தோற்றுவித்த பேயினால் பகைக்கப் பட்ட மனித
உயிர்களைப் பொருந்தியுள்ள பாவம் எல்லாவற்றையும் துடைத்துப்
போக்குதலை நினைவுகூரலானான்.

     'பய' என்ற வினையடியாகப் பிறந்த இறந்த காலப் பெயரெச்சம்.
'பயந்த' எனற் பாலது, முனிவர் வாக்கில், 'பயத்த' என அமைந்துள்ளது.

 
                       2
நனைவருஞ் சண்பக நறுகி ழற்கிணை
யனைவருங் குளிர்பட வருணி ழற்றினோன்
புனைவருந் துணிவொடு புவிபு ரந்திட
நினைவருந் தவம்வழா தெறிநின் றானரோ.