பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 736

நனை வருஞ் சண்பக நறு நிழற்கு இணை,
அனை வரும் குளிர் பட அருள் நிழற்றினோன்,
புனைவு அருந் துணிவொடு புவி புரந்திட
நினைவு அருந் தவம் வழா நெறி நின்றான் அரோ.


     பூவரும்புகள் தோன்றும் சண்பக மரத்தின் மணமுள்ள நிழலுக்கு
ஒப்பாக, மக்கள் அனைவரும் குளிர்ச்சி அடையும் பொருட்டுத் தன்
கருணையாகிய நிழலை வழங்கிய திருமகன், புனைந்து கூறவதற்கும் அரிய
துணிவோடு இவ்வுலகை மீட்டுக் காக்கும் பொருட்டு, நினைவதற்கும் அரிய
தவம் வழுவாத ஒழுக்க நெறியில் தானே நிலை கொண்டான்.

     'நிழல்' என்னும் பெயர் 'நிழற்று' என வினைப் பகுதி ஆகி,
'நிழற்றினோன்' என இறந்த கால வினையாலனையும் பெயர் ஆயிற்று.

 
                        3
கிடந்துதைந் தருமறை தெளித்த நூற்படி
நடந்துமுன் னறநெறி நல்கிப் பூமதுக்
கடந்துபின் னினியவை கனிய வோதுவான்
கிடந்துமின் பிழம்புகக் கிளர்த்த காட்சியான்.
 

திடம் துதைந்து, அரு மறை தெளித்த நூற்படி
நடந்து, முன், அற நெறி நல்கி, பூ மதுக்
கடந்து, பின், இனியவை கனிய ஓதுவான்,
கிடந்து மின் பிழம்பு உகக் கிளர்த்த காட்சியான்.


     மின்னல் திரளாகக் கிடந்து சொரிவது போல் விளங்கிய தோற்றங்
கொண்ட திருமகன், மனவுறுதி பூண்டு, முன், அரிய வேதம் தெளிவித்துள்ள
நூலின் கருத்துப்படி தானே நடந்து, இதுவே அறநெறியென்று செயலால்
வழங்கி, பின். பூவின்லுள்ள தேனின் இனிமையையும் கடந்த விதமாய்,
இனிய ஒழுக்க நெறியை மக்களுக்குக்கனிவோடு எடுத்துரைப்பான்.

 
               4
செய்வினை யுரைவினை திரிபு லாசெயிர்
கொள்வினை யாகையிற் குணுங்கிங் குய்த்தபற்
பொய்வினை யனைத்தையும் போக்கி யாண்டையு
மெய்வினை யுணர்த்துவான் மெய்யின் காணியான்.