செய்வினை உரைவினை
திரிபு இலா, செயிர்
கொய்வினை ஆகையில், குணுங்கு இங்கு உய்த்த பல்
பொய்வினை அனைத்தையும் போக்கி, யாண்டையும்
மெய்வினை உணர்த்துவான், மெய்யின் காணியான். |
உண்மையையே
தன் உரிமைச் சொத்தாகக் கொண்டுள்ள திருமகன்,
தான் செய்யும் செயலுக்கும் பேசும் செயலுக்குமிடையே முரண்பாடு
இல்லாமல், பாவத்தை அறுக்கும் செயலை நிகழ்த்துவதன் மூலம், பேய்
இவ்வுலகிற் கொண்டு புகுத்திய பல வகைப் பொய்ச் செயல்கள்
அனைத்தையும் போக்கி, உண்மையோடு பொருந்திய செயல்களை எங்கும்
உணர்த்துவான்.
செய்வினை
உரைவினை திரிபிலா' என்பதை வளன் போதித்த
முறையோடு (27 : 17) ஒப்பிடுக.
5 |
ஒப்பிலா
னோரென்பா னென்று ணர்கிலா
துப்பிலாத் தேவரைத் தொழுத லந்தகற்
கப்பிலாழ்ந் தந்தகன் றுணைய மைந்தெனத்
தப்பிலா வழுவிவர் தவிர்க்கு மோவென்பான். |
|
"ஒப்பு இலான்
ஓர் என்பான் என்று உணர்கிலா,
துப்பு இலாத் தேவரைத் தொழுதல், அந்தகற்கு,
அப்பில் ஆழ்ந்து அந்தகன், துணை அமைந்து என,
தப்புஇலா வழு இவர் தவிர்க்குமோ?" என்பான். |
"ஒப்பற்ற
ஆண்டவன் ஒருவனே எனப்படுவான் என்று உணர
இயலாமல், தம்மையே காக்கும் வலிமை இல்லாத பல தேவரைத் தொழுதல்,
குருடன் ஒருவன் தானே தண்ணீரில் ஆழ்ந்து கொண்டிருக்கும் நிலையில்
அவ்வாறான மற்றொரு குருடனுக்குத் துணையாக அமைந்தது போல்
ஆவதன்றி, தவறாது வரும் பாவத்தை இத்தேவர் விலக்கக் கூடுமோ?
என்று எடுத்துக் கூறுவான்.
'இவர்
தவிர்க்கும்' என்பது போல, பலர்பாற் படர்க்கைக்கு வருதல்
இல்லாத 'செய்யும்' என்னும் முற்று, அதற்கும் வருவதாக அமைத்தல்
முனிவர் மரபு. "அந்தகற்கு அந்தகன் துணை" மத்தேயு 15 : 14 இல் வருதல்
காண்க.
|