6 |
மீன்னுரைத்
திழைத்தபொற் கோயில் வேய்ந்தினுங்
கொன்றுரைத் தனவுரு கொள்கைத் தெய்வமோ
பொன்னுரைத் தொளிப்படப் புனைந்த பாவைக
ளென்னுரைத் திடுவதோ ரியல்வுண் டோவென்பான். |
|
"மின்உரைத்து
இழைத்த பொற்கோயில் வேய்ந்தினும்,
கொன்உரைத்தன உரு கொள்கைத் தெய்வமோ?
பொன்உரைத்து ஒளிப்படப் புனைந்த பாவைகள்,
என்உரைத்தீடுவது ஓர் இயல்பு உண்டோ?' என்பான் |
"மின்னலை
உரைத்துச் செய்தாற் போன்ற பொற்கோயிலை அழகு
செய்து வைத்தாலும், வீணே அதனுள் அழகு செய்த உருவம் கொள்ளத்
தக்க தெய்வம் ஆகுமோ? பொன்னை உரைத்துப் பூசி ஒளி பொருந்த அழகு
செய்த மரப்பொம்மைகளுக்கு ஏதேனும் பேசுகின்ற தன்மை உண்டோ?
என்றும் சொல்வான்.
7 |
உலகிடத்
தோரென்பா னுரைத்த நூற்படி
விலகிடத் துகளெலாம் விலகி யீரற
மிலகிடத் திடரறுத் தியலு நற்பய
னலகிடத் தகுதியை யறிவர் யாரென்பான். |
|
"உலகிடத்து
ஓர் என்பான் உரைத்த நூற்படி,
விலகிட, துகள் எலாம் விலகி, ஈர்அறம்
இலகுஇடத்து, இடர்அறுத்து இயலும் நற்பயன்
அலகுஇடு அத்தகுதியை அறிவர் யார்?" என்பான்.
|
"இவ்வுலகில்
ஒருவனே எனப்படும் ஆண்டவன் ஓதிய வேத நூலுக்கு
ஏற்ப, விலக்க வேண்டியவற்றை விலக்கவே, பாவ மெல்லாம் நீங்கி, இல்லறம்
துறவறமென்னும் இருவகை அறங்களும் விளங்குமிடத்து, துன்பமெல்லாம்
போக்கி விளையலாகும் நல்ல பயனை அளவிட்டுக் கூறும் அந்தத் தகுதியை
அறிபவர் யார்?" என்றும் கூறுவான்.
|