10 |
கள்வரும்
பொருடகாக் கடந்த சொற்புகழ்
கொள்வரு மனையவர் கொண்ட வப்புக
ழெள்வரு மிழிவதே யியன்ற தாழ்ச்சியா
லொள்வரும் புகழென்பா னுலகி லோரென்பான். |
|
"கள்வரும்,
பொருள் தகாக் கடந்த சொற் புகழ்
கொள்வரும் அனையவர்; கொண்ட அப் புகழ்
எள் வரும் இழிவு அதே. இயன்ற தாழ்ச்சியால்
ஒள் வரும் புகழ்" என்பான், உலகில் ஓர் என்பான்.
|
இவ்வுலகில்
ஒரே கடவுள் எனப்படும் அத் திருமகன், "திருடரும்,
உண்மைக்குப் பொருந்தாது, தகுதியை மிஞ்சிய சொல்லால் வரும் புகழைத்
தமக்கு உரியதென்று ஏற்றுக் கொள்பவரும் ஒப்பாவர்; அவ்வாறு கொண்ட
புகழும் இகழ்ச்சி வருவதற்குக் காரணமான இழிவாகவே அமைந்து விடும்.
தம்மிடம் பொருந்திய தாழ்மையால் ஒளி பொருந்திய புகழ் வரும்" என்றும்
எடுத்துக் கூறுவான்.
11 |
இக்கெனப்
பொருளொளி யின்ப மூன்றுமே
புக்கெனப் புரையெலாம் புவிபு குந்தன
மிக்கெனத் துடைத்தவை வெல்லு வான்பொறை
சிக்கெனத் தாங்கியெஞ் செயிரைத் தாங்கினான். |
|
இக்கு என பொருள்
ஒளி இன்பம் மூன்றுமே,
புக்கு என, புரை எலாம் புவி புகுந்தன
மிக்கு என, துடைத்து அவை வெல்லுவான், பொறை
சிக்கு எனத் தாங்கி, எம் செயிரைத் தாங்கினான். |
செல்வம்
புகழ் இன்பம் என்ற மூன்றுமே கரும்பென மதித்து, மக்கள்
அவற்றையே தேடப் புகுந்த காரணத்தால், பாவமெல்லாம் இவ்வுலகில்
மிகுதியாக வந்து புகுந்தனவென்று கண்டு, அவற்றைப் போக்கி வெல்லும்
பொருட்டு, பொறுமையைச் சிக்கெனப் பிடித்து, அவ்வாறு நம்
பாவங்களையெல்லாம் அவன் தன் மீது தாங்கிக் கொண்டுள்ளான்.
|