கண் தரும்; கரம்
தரும்; செல்லக் கால் தரும்;
உண் தரும்; களி தரும்; உயிர் தரும்; தகும்
பண்டு அருந் துயர்கள் நோய் பலவை தீர் தரும்;
மண்டு அருந் தயை நலம் வழங்கத் தந்து உளான். |
கண்ணைத்
தருவான்; கையைத் தருவான்; நடந்து செல்லக் காலைத்
தருவான்; உணவு தருவான்; மகிழ்ச்சி தருவான்; உயிர் தருவான்;
மதிக்கத்தக்க பழமை வாய்ந்த அரிய துயர்கள் நோய்கள் பலவற்றையும்
தீர்த்துத் தருவான்; இவ்வாறு, தன்னிடம் செறிந்து கிடந்த அரிய தயை
நலத்தை மக்களுக்கு வழங்கும் ஆற்றலைச் சீடருக்குக் கொடுத்துள்ளான்.
| 15
|
தந்தநன்
றெவர்க்குமாய்த் தனக்கி யாவரு
மந்தமொன் றிலாமலி யல்ல லாக்கலும்
வந்ததன் றுயரெலா மனத்தெண் ணாப்பொறைக்
கந்தளந் தரித்தனன் கருணை வேலையான். |
| |
|
தந்த நன்று
எவர்க்கும் ஆய் தனக்கு யாவரும்
அந்தம் ஒன்று இலா மலி அல்லல் ஆக்கலும்,
வந்த தன் துயர் எலாம் மனத்து எண்ணாப் பொறைக்
கந்தளம் தரித்தனன், கருணை வேலையான்.
|
கருணைக்
கடலாகிய அவ்வாண்டவன், தான் தந்த நன்மைகளை
யாவருக்கும் உரிமையாக்கி, யாவரும் தனக்கு முடிவு ஒன்றுமில்லாத மிகுந்த
துன்பங்களைச் செய்தவிடத்தும், அவற்றால் தனக்கு வந்த
துயரங்களையெல்லாம் மனத்தில் எண்ணாத பொறுமையென்னும் கவசத்தை
அணிந்துள்ளான்.
| 16 |
புரைசெயுந்
தன்றுயர் பொறுத்து நொந்திலா
னுரைசெயு நெறியுறா வுயிரைத் தீநர
கிரைசெயும் பாவமென் றிரங்கி விம்முவான்
கரைசெயுங் கடலிணை கடந்த வன்பினான். |
| |
புரை செயும் தன்
துயர் பொறுத்து, நொந்து இலான்;
உரை செயும் நெறி உறா உயிரைத் தீ நரகு
இரை செயும், பாவம், என்று இரங்கி விம்முவான்,
கரை செயும் கடல் இணை கடந்த அன்பினான். |
|