|
கரை
கொண்ட கடலின் ஒப்புமையையும் கடந்த அன்புள்ள
அவ்வாண்டவன், மக்கள் செய்யும் பாவத்தால் தனக்கு உண்டாகும்
துயரத்தைப் பொறுத்துக் கொண்டு, அது பற்றி வருந்துவான் அல்லன்; தான்
சொல்லும் நெறியில் நடவாத உயிரைப் பாவம் நெருப்பு நிறைந்த நரகத்திற்கு
இரையாக்குமேயென்று வருந்தி பெருமூச்சு விடுவான்.
| 17 |
நக்குமோர்
சிறுசுவை நச்சி நீங்கலா
சிக்குமோர் நிறைதுயர் சிந்திப் பாரிலா
தக்குமோ ரறிவில தரணி கெட்டதென்
றொக்குமோ ரிணையிலா னுளைந்தி ரங்குவான். |
| |
நக்கும் ஓர்
சிறு சுவை நச்சி, நீங்கு அலா
சிக்கும் ஓர் நிறை துயர் சிந்திப்பார் இலா,
தக்கும் ஓர் அறிவு இல, தரணி கெட்டது என்று,
ஒக்கும் ஓர் இணை இலான், உளைந்து இரங்குவான். |
தனக்கு
ஒப்பாகக் கூடிய இணையென்று ஒன்றும் இல்லாது உயர்ந்த
திருமகன், நக்குவது போன்ற ஒரு சிறு சுவையை விரும்பி, நீங்க இயலாது
அதனுள் சிக்கிக் கொள்ளும் ஒரு நிறைந்த துயரத்தைச் சிந்திப்பார்
இல்லாமலும், நிலைக்கும் தன்மையுள்ள ஓர் அறிவு இல்லாமலும், இவ்வுலகம்
கெட்டுப் போயிற்றேயென்று நொந்து வருந்துவான்.
| 18 |
தீதளித்
தோச்சிய தீய கோன்மையாற்
கோதளித் துயிருணுங் குணுங்கை வெல்லவு
நீதளித் தெரிந்தநின் வெகுளி நீக்கவு
மேதளித் தியற்றுவே னென்பி தாவென்றான். |
| |
"தீது அளித்து
ஓச்சிய தீய கோன்மையால்,
கோது அளித்து உயிர் உணும் குணுங்கை வெல்லவும்,
நீது அளித்து எரிந்த நின் வெகுளி நீக்கவும்,
ஏது அளித்து இயற்றுவேன், என் பிதா?" என்றான். |
"என்
தந்தையே, தீமையை விளைவித்துச் செலுத்திய
கொடுங்கோன்மையினால் பாவத்தை விளைவித்து ஆன்மாக்களை உண்ணும்
|