பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 746

இத்திறத்து, இறைவன் நேர்ந்த இயல்பு இது என்று அறிந்த பேய்கள்,
மைத்திறத்து உடன்ற வஞ்ச மறப்பகை, இவன் மேல் தீயோர்
கைத்திறத்து இயற்றல் உள்ளி, காய்தழல் தூண்டினாற்போல்,
அத்திறத்தினரை ஏவி, அரும்பகை முற்றிற்று அன்றோ.


     இவ்வகையாய், அவதரித்த ஆண்டவன் இசைந்து நின்ற இயல்பு
இதுவென்று அறிந்து கொண்ட பேய்கள், தாம் இருளின் தன்மையாய்ச்
சினந்து கொண்ட கொடும் பகையை, இவன்மீது தீயவர்களின்
கைத்திறத்தைக் கொண்டு செய்து முடிக்கக் கருதி, எரியும் நெருப்பை
மூட்டிவிட்டாற்போல, அத்தகைய தீயவரை ஏவிவிடவே, அவன்மீது
அரிய பகை முதிர்ந்து நின்றது.

 
                     23
கண்கிழித் தொழுகச் செந்தீக் கதத்தின ரடித்த பாலால்
விண்கிழித் தொழுகு மாரி விதப்பென வெந்தை யாக்கை
புண்கிழித் தொழுகுஞ் செந்நீர் புரைவினை மலங்க டீர்ப்ப
மண்கிழித் தொழுகு வெள்ள மலிவொடாங் கொழுகிற்
                                    றன்றோ.
 

கண் கிழித்து ஒழுகச் செந் தீக் கதத்தினர் அடித்த பாலால்,
விண் கிழித்து ஒழுகும் மாரி விதப்பு என, எந்தை யாக்கை
புண் கிழித்து ஒழுகும் செந்நீர், புரை வினை மலங்கள் தீர்ப்ப,
மண் கிழித்து ஒழுகு வெள்ளம், மலிவொடு ஆங்கு ஒழுகிற்று
                                     அன்றோ.


     செந்நிற நெருப்பு தம் கண்களைக் கிழித்துக் கொண்டு பாய்வது
போன்ற சினங்கொண்ட பகைவர் அடித்த தன்மையால், மேகத்தைக்
கிழித்துக் கொண்டு பாயும் மழையினும் மிகுதியென்று கொள்ளுமாறு, நம்
தந்தையாகிய ஆண்டவனின் உடலைப் புண்படக் கிழித்துப் பாயும் குருதி,
நம் பாவ வினைகளாகிய அழுக்கையெல்லாம் போக்குமாறு, பூமியைக்
கிழித்துக் கொண்டு பாயும் வெள்ளத்தின் மிகுதியோடு அங்கே
பாய்ந்தோடியது.

 
                     24
கடுமரத் திழிந்த நஞ்சுட் கடுத்தடும் வினையைக் காக்க
நெடுமரத் திழிந்த தேவ நிலைமருந் துரிய தென்ன
வடுமரக் கனியான் மாக்கட் கமைந்ததொற் பழியை யெந்தை
கொடுமரத் தறைவுண் டெம்மைக் குணித்திறந் தொருங்கு
                                    தீர்த்தான்.