| 28 |
இருட்பொதிரி
ராவுணவி ளங்கிரவி போன்றே
மருட்பொதிர வாவமர்ம னத்தொளிவ் யங்கத்
தெருட்பொதிர்மு கத்திறிரு வாசியுரை செய்தே
யருட்பொதிர்க திக்குரிய காட்சியைய ளித்தான். |
| |
இருள்
பொதிர் இரா உண விளங்கு இரவி போன்றே,
மருள் பொதிர் அவா அமர் மனத்து ஒளி வயங்க,
தெருள் பொதிர் முகத்தில் திரு ஆசி உரை செய்தே,
அருள் பொதிர் கதிக்கு உரிய காட்சியை அளித்தான். |
இருள்
நிறைந்த இரவை விழுங்கி விளங்கும் கதிரவனைப் போன்று,
மயக்கத்தால் நிறைந்த ஆசை பொருந்திய அப்பாதலத்தவர் மனத்தில் ஒளி
விளங்குமாறு, திருமகன் தெளிவு நிறைந்த முகத்தோடு தன் திரு ஆசியை
முதலில் சொல்லால் வழங்கி, பின் அருள் நிறைந்த வானுலகிற்குரிய
காட்சியை வழங்கினான்.
| 29 |
விற்றிறம
னத்திறரு விஞ்சைநலம் விஞ்ச
மற்றிறந லோனைமறை வற்றினிது காண
நற்றிறமி யற்றியத வத்தரிய நல்லோர்
சொற்றிறம கன்றநய முண்டுதொழு கின்றார். |
| |
வில் திற மனத்தில்
தரு விஞ்சை நலம் விஞ்ச,
மல் திற நலோனை மறைவு அற்று இனிது காண,
நல் திறம் இயற்றிய தவத்து அரிய நல்லோர்
சொல் திறம் அகன்ற நயம் உண்டு தொழுகின்றார். |
இவ்வாறு
ஒளியின் திறம் கொண்ட தம் மனத்தில் திருமகன்
தந்தருளிய அறிவு நலம் மேலோங்கவே, வலிமைத் திறங் கொண்டுள்ள
நல்லவனாகிய ஆண்டவனை மறைவில்லாமல் கண்டு, நல்ல திறத்தோடு
செய்த தவத்தினால் அரியவராகிய அந்நல்லோர்கள், சொல்லின் திறத்திற்கு
எட்டாத இன்பத்தைத் தாம் அனுபவித்து அவனைத் தொழுகின்றனர்.
|